MEDIA STATEMENT

ராணுவம், காவல்துறை நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும், பயனீட்டாளர்கள் பிரச்சினைக்கு அல்ல

ஷா ஆலம், 24 ஏப்ரல் :

உள்நாட்டு வாணிபம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சு அறிவித்துள்ள மலேசிய ஆயுதப் படைகள் மற்றும் மலேசிய காவல்துறை ஆகியவை அதன்  அமைச்சின்  அமலாக்க முறையை மேம்படுத்த  ஒத்துழைப்பு வழங்கும்  என்ற கூற்றை கேள்வி பட்டேன்.

அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஜைனூடினின் அறிக்கையை மேற்கோள்காட்டி,  வியாபார வளாகங்களில்  அதிகரிப்பு மற்றும் பயனீட்டாளர்கள் பிரச்சனை எண்ணிக்கை உயர்வு  ஆகிய அடிப்படையில் இந்த ஒத்துழைப்பு தேவைப்படுவதாக கூறியிருந்தார். மேலும் கூறுகையில், தன் நிர்வகிக்கும்  அமைச்சின் கீீழ் 2600 அதிகாரிகள் இருக்கிகிறார்கள்  எனவும்  இந்த  எண்ணிக்கை அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க பற்றாக்குறையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

1. என்னை பொறுத்தவரை, மேற்கண்ட செய்தி ஒரு சாக்கு போக்கு எனலாம். அப்படி அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் சரியான முறையில் பரிசோதனைகளை மேற்கொண்டால் அதிக பிரச்சனைகள் எழ வாய்ப்பில்லை.

2. அதைத் தவிர, ராணுவம் மற்றும் காவல்துறையின் உண்மையான பொறுப்புகளுக்கு இது  தடையாக இருக்கிறது.  அமைச்சு பிரச்சனைகளைக் களைய வேறு வழிகளை யோசிக்க வேண்டும், மாறாக ராணுவம் மற்றும் காவல்துறை பொறுப்புகளுக்கு  இடையூறு ஏற்படத்தக் கூடாது. அவர்கள் நாட்டின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதுகிறேன்.

மேற்கண்ட பிரச்சனைகளைக் களைய  அரசாங்கம்  அமலாக்க  அதிகாரிகளை அதிகரிப்புச் செய்ய வேண்டுகிறேன். இதன் மூலம்  அமைச்சின் அமலாக்க நடவடிக்கைகளையும் அவ்வப்போது கவனித்து மற்ற இலாகாவின் அதிகாரிகளை பயன்படுத்தி வருவதை தவிர்க்கலாம். அமைச்சர்களை அதிகரிக்கும் போது  ஏன்  அமலாக்க அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது?

Lee-Chean-Chung

 

 

 

 

 

3. மேற்கண்ட நடவடிக்கை அமைச்சின் நிதியில்   அதிகரிப்பு ஏற்படும், ஆனால்  இதனால் அவர்களின் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள முடியாது. பொருட்களின் விலை உயர்வினால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில்  அமைச்சு பிரச்சனையில் இருந்து கை கழுவி விடக்கூடாது.

4. அமலாக்க அதிகாரிகள் வாணிப வளாகங்களில் தென்படவில்லை  என்றும் ஆக்ககரமான  அமலாக்க முறை சட்ட வழிமுறையை வியாபாரிகள் கடைப்பிடித்து வருவதையும் கண்காணிப்பு முறை மேம்படுத்த வேண்டும்.

5. தற்போதைய நிலையில், நாட்டின் பொருளாதரம் வீழ்ச்சியை நோக்கி செல்லும் போது ரிங்கிட்டின் வீழ்ச்சியும் மக்களின் சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

பெரும்பாலும் விலை உயர்வு விழாக் காலங்களில் மட்டுமே  அடையாளம் காணப் படுகிறது.  அமைச்சு விழாக் காலங்களுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. மாறாக  உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தால் மக்களின் நம்பிக்கையை பெறலாம்.

* லீ சீன் சுங்

செமாம்பு சட்ட மன்ற உறுப்பினர்

 


Pengarang :