PBTSELANGOR

1,689 குப்பைத் தொட்டிகள் இலவசமாய் விநியோகம்

ஷா ஆலாம் – சிலாங்கூர் ஷா ஆலாம் செக்க்ஷன் 13இன் குடியிருப்பு பகுதியில் சுமார் 1689 குப்பைத் தொட்டிகளை  ஷா ஆலாம் மாநகர மன்றம் இலவசமாக   வழங்கியதாக அதன் மேயர் டத்தோ  அமாட் ஷாஹாரின் முகமட் சாட் தெரிவித்தார்.

இந்த இலவச குப்பைத் தோட்டிகள் மூலம் பொது மக்கள் குப்பைகளை மிகவும் விவேகமாய் பிரித்தாள முடிவதோடு அதனை சிறந்த முறையில் பராமரிக்கவும் முடியும் என்றார்.

“zero waste” எனும் ஷா ஆலாம் மாநகர மன்றத்தின் குப்பைகள் அற்ற ஷா ஆலாம் எனும் இலக்கு  இதன் மூலம் வெற்றி அடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்த அவர்  முறையான குப்பைத் தொட்டிகள் இருப்பதால் ஆங்காங்கே முறையற்று வீசப்படும் குப்பைகளை காண முடியாது என்றும் கூறினார்.

அதேவேளையில்,குப்பைகளை அகற்றும் பணியும் செம்மையாகவும் எவ்வித சிக்கலும் இன்றி மேற்கொள்வதற்கும் அஃது வழிகோலும் என கூறிய மேயர் இந்த திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியிலும் நன் வரவேற்ப்பு கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

இந்த திட்டத்திற்காக மாநகர மன்றம் சுமார் 10 மில்லியனை செலவிட்டிருப்பதாக கூறிய மேயர் இலவசமாக வழங்கப்பட்டிருக்கும் இந்த குப்பைத் தொட்டிகளை நன் முறையில் பயன்படுத்தி ஷா ஆலாம் நகரை தூய்மையான குப்பைகள் அற்ற நகராய் உருவாக்க பெரும் பங்காற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

 

 

 

 


Pengarang :