ECONOMYRENCANA PILIHANSELANGOR

30,000 வர்த்தகர்களுக்கு வெ.173 மில்லியன் ஹிஜ்ரா கடனுதவி

ஷா ஆலாம் -சிறுத்தொழில் வர்த்தகர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வர்த்தகத்தில் இளம் தலைமுறையினரை ஆர்வமுடன் ஈடுபடுத்தவும் தொடங்கப்பட்ட ஹிஜ்ரா வர்த்தக கடன் உதவி திட்டம் அதன் இரண்டாடு நிறைவினை எட்டியுள்ள வேளையில் இதுவரை இத்திட்டத்திற்காக வெ.173 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக அதன் தலைமை நிர்வாகி டத்தோ டாக்டர் மன்சோர் ஓத்மான் தெர்வித்தார்.

மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் அஸ்மின் அலியின் தலைமைத்துவத்தின் கீழ் விவேகமாய் இயங்கிடும் இந்த ஹிஜ்ரா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 30,000 வர்த்தகர்கள் பெரும் நன்மை அடைந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திற்கு டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தலைமையேற்ற பின்னர் அவர் அமல்படுத்திய பரிவு மிக்க திட்டங்களில் ஒன்றாக விளங்கிடும் ஹிஜ்ரா திட்டம் பெரும் வெற்றியினை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பதாக கூறிய அவர் வர்த்தகர்கள் காட்டிடும் முனைப்பும் ஆக்கப்பூர்வ பங்களிப்பும் மாநில அரசாங்கத்தின் இலக்கு வெற்றி அடைய பெரும் பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.

அதன் காரணியமாகவே இரண்டாண்டில் சுமார் 30,000 வர்த்தகர்களுக்கு வெ.173 மில்லியன் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.ஹிஜ்ரா திட்டம் அதன் இலக்கில் சரியாக பயணிக்க தொடங்கியிருப்பதால் இதன் மூலம் இன்னும் அதிகமான வர்த்தகர்களை உருவாக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலம் ஒவ்வொரு ஆண்டும் அதன் பொருளாதார மீட்பில் சிறந்த லாபத்தை ஈட்டும் வேளையில் மக்களுக்கு அந்த லாபம் சென்றடைவதற்கு ஹிஜ்ரா போன்ற திட்டங்கள் பெரிதும் உதவுவதாகவும் கூறிய அவர் ஹிஜ்ரா திட்டத்தின் கீழ் மதம்,இனம் பேதமின்றி பல்லினத்தவர்களும் நன்மை அடைந்து வருவதாகவும் கூறினார்.

ஹிஜ்ரா திட்டத்தின் கீழ் சிறுத்தொழில் வர்த்தகர்கள் மற்றும் நடுநிலை வர்த்தகர்கள் மாநில அரசாங்கத்தின் இலக்காக இருந்து வந்த நிலையில் தற்போது மாற்றுத்திறனாளி வர்த்தகர்களும் ஹிஜ்ரா திட்டத்தின் இலக்காக இருப்பதாகவும் கூறினார்.இதன் மூலம் அவர்களின் வர்த்தகம் மேம்படுவதோடு பொருளாதாரமும் நன் நிலையில் உயரும் என்றார்.

ஹிஜ்ரா அறவாரியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இரவு விருந்தோபல் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை பெருமிதமாய் குறிப்பிட்டார்.

 

 

 

 


Pengarang :