SUKANKINI

ஃபுவாட் இன்னும் திருப்தி அடையவில்லை, பந்தய வீரர்கள் தங்கள் சாதனையை மேம்படுத்த வேண்டும்

ஷா ஆலம், மே 1:

   பெட்ரோனாஸ் ஸ்ப்ரின்தா யமஹா-ஏப் தெக் குழுவின் நிர்வாகி, அமாட் ஃபுவாட் பஹாருடின் தன் பந்தய வீரர்கள் சிறப்பான வெற்றியை பதிவு செய்தாலும் அலட்சியமாக  இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.  இதற்கு முன்பு நடந்த 2 பந்தயங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

   மூன்றாம் சுற்று பந்தயம் கெமாமன், திரெங்கானுவில் 5 மற்றும் 6 மே தேதிகளில் நடக்கும் போது தனது பந்தய வீரர்களான முகமட் அய்மான் தஹிருடின், முகமட் டேனியல் ஷாமி மற்றும் முகமட் கைரி அஸ்ராஃப் ஆகியோர் “போடியத்தில்” முதல் நான்கு  இடங்களைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

   இரண்டு சுற்றுகள் முடிந்து, இதில் முகமட் அய்மான் தெமர்லோ, பஹாங்கில் மூன்றாம்  இடமும் தங்காக், ஜோகூரில் முதல்  இடமும் பெற்று புள்ளி பட்டியலில் 41 புள்ளிகளுடன் முதல்  இடத்தில் இருந்து வருகிறார்.

PETRONAS AAM (2)

 

 

 

 

 

டேனியல்  இது வரை 31 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் கைரி 28 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது  இடத்தில் ஹொன்டா குழுவின் சைபூல் அஸாரி முகமட் 33 புள்ளிகளுடன் உள்ளார்.

PETRONAS AAM (1)

 

 

 

 

 

” பந்தயங்களில் வெற்றி பெற்றாலும் “போடியும்” ஏறினாலும் நிறைய போட்டிகளின் வீயூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நான் அவர்களுடைய போட்டியிடும் திறனை வளர்த்துக் மேம்படுத்த வேண்டும்,” முன்னாள் தேசிய பந்தய வீரருமான அவர்  தெரிவித்தார்.

 


Pengarang :