SELANGORWANITA & KEBAJIKAN

அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களை பெக்காவினிஸ் சிறப்புச் செய்யும்

ஷா ஆலம், மே 13:

சிலாங்கூர் மகளிர் சமூக நல மற்றும் தொண்டுழிய அமைப்பு (பெக்காவினிஸ்) அன்னையர் தினத்தை முன்னிட்டு 1000 தாய்மார்களுக்கு சிறப்புச் செய்யும் என்று தெரிவித்துள்ளது. பெக்காவினிஸ் தலைவர், டத்தின் ஸ்ரீ ஷாம்ஸிடார் தஹாரின் கூறுகையில் இந்த நடவடிக்கை தாய்மார்களின் அர்ப்பணிப்புகளை பாராட்டி சிறந்த மகிழ்ச்சியான குடும்பத்தை வழி நடத்தும் சேவையை மதிக்கிறோம் என்று கூறினார். அன்னையர்களை ஒரு நாள் மட்டுமில்லாமல் தினந்தோறும்  அவர்களின் அர்ப்பணிப்பை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார்.

”   ஒரு பெண்மைக்கு தாய் என்ற அங்கீகாரம் மிகப்பெரியது. இறைவன் பெண்களை உயர்ந்த நிலையில் படைத்திருக்கிறார், எல்லா மதங்களும் பெண்களை குறிப்பாக தாய்மார்களை மதிப்பும் மரியாதையும் செய்வார்கள்,” என்று ஷாம்ஸிடார் 2017-இன் அன்னையர் தின தொடக்க விழாவில் நினைவுறித்தனார்.

இந்த நிகழ்வில் மாநில சமூக நல, சுகாதார, மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை  ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி மற்றும் சிலாங்கூர் மாநில தஸ்கா இயக்கத்தின் தலைவர், மஹானோம் பஸ்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உச்சக் கட்டமாக நாடாளுமன்ற  எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் பெக்காவினிஸ் அமைப்பின் சிறப்பு விருதை பெற்றார். அமெரிக்கா நாட்டில்  இருப்பதால் விருதை அவரின் மகள் நூருல் ஹில்ஹாம் அன்வர் பெற்றுக் கொண்டார்.


Pengarang :