ECONOMYRENCANA PILIHAN

உலக எண்ணெய் விலை தொடர்ந்து இறக்கம்

நியு யோர்க், மே 2:

லிபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி  அதிகரிப்பின் காரணமாக உலக  எண்ணெய் விலை 1% இறக்கம் கண்டது.

ரியூட்டர்ஸ் செய்தியின் படி, இந்த விலை இறக்கம்  அமெரிக்கா நாடு அதிகரிக்கும்  உற்பத்தி பிரச்சனையை களைய வேண்டும் என்று வலியுறுத்தி ஓபேக் நாடுகளை சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்ததன் காரணமும் அடங்கும்.

   சீன நாட்டின் உற்பத்தி குறைந்து காணப்படுவது மற்றும்  அமெரிக்கா நாட்டின் புள்ளி விவரங்கள் மந்தமாக இருந்து வருவதால் கச்சா எண்ணெய் தேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. 

உலக எண்ணெய் தர வரிசையில், பிரண்ட் 53 சென் குறைந்து அமெரிக்கா டாலர்  $51.52 ஒரு பீப்பாய் வீதமும் அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை 49 சென் குறைந்து அமெரிக்கா டாலர்  $48.84- ஆக இறங்கியது.

 

திரெடிசன் எனர்ஜி நிறுவனத்தின் சந்தை ஆய்வு நிர்வாகி, ஜீன் மேக்கிலீயன் கூறுகையில் சந்தையில் இறங்குமுகமாக இருக்கும் நிலையில் அமெரிக்கா கச்சா எண்ணெய் தொடர்ந்து வீழ்ச்சி  அடையும் என்றார்.

ஓபேக் நாடுகள் மற்றும்  ஓபேக் சேராத நாடுகளாக எதிர் வரும் மே 25 சந்திப்பு கூட்டம் நடத்தவிருக்கிறது எனவும்  அதில் உற்பத்தி குறைவு செய்யும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  அல்லது வேண்டாம் என்று முடிவு  எடுக்க உள்ளனர்.


Pengarang :