ECONOMY

உலக எண்ணெய் விலை 1% இறக்கம்

நியூ யோர்க், மே 31:

லிபியா நாட்டின் எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக உலக கச்சா எண்ணெய் விலை இறக்கம் கண்டது என ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது. இது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் உற்பத்தியை குறைக்க முடியாது என்ற அச்சத்தில் ஏற்பட்டுள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 45 சென் அல்லது 0.9% குறைந்து அமெரிக்கா டாலர்  $51.84 பீப்பாய் வீதமும், அமெரிக்காவின் இலகு கச்சா எண்ணெய் விலை 14 சென் அல்லது 0.3% குறைந்து அமெரிக்கா டாலர்  $49.66 பீப்பாய் வீதம் ஆகியது.

”   இது மிக சிறிய அளவிலான சந்தை மாற்றமே, தொடர்ந்து நீண்டகால அடிப்படையில் விவரங்கள் வரும்,” என்று யு.எஸ் பேங்க் வெல்த் மேனேஜ்மென்ட் மூத்த முதலீட்டு நிபுணர், ரோப் ஹாவோர்த் கூறினார்.


Pengarang :