PBTSELANGOR

எம்டிகெஎல் பொது மக்களை ஆர்திகெஎல் 2030 பற்றிய கருத்துகளை பரிந்துரை செய்ய வேண்டுகிறது

பந்திங், மே 24:

கோலா லங்காட் மாவட்ட மன்றம் (எம்டிகெஎல்) பொது மக்களிடம் 2030 வரையிலான கோலா லங்காட் ஊராட்சி திட்ட வரைவு மீது பரிந்துரை அல்லது எதிர்ப்புகள் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கிறது என்று அதன் தலைவர் முகமட் ஜைன் ஹமீத் கூறினார். உள்ளூர் மக்களின் கருத்துகள் மிக முக்கியம் ஏனெனில் கோலா லங்காட் வட்டாரத்தின் மேம்பாட்டு திட்டங்கள் சுற்று சூழல் பராமரிக்கவும் மற்றும் பாதுகாக்கவும் இருத்தல் அவசியம் என்று விவரித்தார்.

இந்த திட்ட வரைவில் மேம்பாட்டு அம்சங்கள் மற்றும் நான்கு அடிப்படைக் கொள்கைகள் முறையே நிலையான சுற்று சூழல் மற்றும் வெளிப்புற மேம்பாடு, போட்டியிடும் பொருளாதார வளர்ச்சி,வாழ்க்கை தர உயர்வு மற்றும் சிறந்த நிர்வாக திறன் போன்றவை இடம் பெற்றுள்ளது என்றார்.

WhatsApp Image 2017-05-23 at 12.21.23

 

 

 

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில், 2030-இன் ஆர்திகெஎல் விளம்பரம் செக்சன் 13, 172 சட்டத்தின் கீழ் ஜூன் 23 தொடங்கி ஒரு மாத காலத்திற்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப் படும் என்று விவரித்தார்.


Pengarang :