PBTSELANGOR

எம்பிகே அனுமதியில்லாத 23 கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுத்தது

ஷா ஆலம், மே 16:

கிள்ளான் நகராண்மை கழகம் (எம்பிகே) ஸ்ரீ பாயூ மற்றும் ஸ்ரீ அங்காசா அடுக்குமாடி வீடமைப்பு பகுதியில் ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்ட 23 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டது. எம்பிகே-வின் செயலாளர், ஹடி பைஃசால் தர்மிஸி கூறுகையில் அகழி, சாலை மற்றும் கட்டிட சட்டத்தின்  (பிரிவு 133) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார். இந்த நடவடிக்கை வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் அனுமதியில்லாத நிர்மாணிப்பு குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும் என்று விவரித்தார்.

”   அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கடைகள் வியாபார உரிமம் இல்லை, மேலும் கார் நிறுத்துமிடம் பற்றாக்குறை ஏற்படுத்தியது, கடைகளின் கூரைகள் இஷ்டப்படி கட்டியது மற்றும் பொருட்களை நிரந்தரமாக வைத்தது போன்ற பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இதுமட்டுமின்றி, இந்த கடைகளின் தோற்றம் கார் நிறுத்துமிடம் ஒழுங்கு முறையின்றியும் மற்றும் சட்ட விரோத வெளிநாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது ஆகும்,” என்று தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், சட்ட விரோத கடைகளை உடைக்க எம்பிகேவின் கட்டிட இலாகா நடவடிக்கையில் இறங்கியது என்று கூறினார். தொடர்ந்து, இந்த திடீர் நடவடிக்கை எடுக்க முக்கிய காரணம் ஆபத்தான மின்சார இணைப்பு மற்றும் இதனால் ஏற்படக்கூடிய பின் விளைவு அல்லது உயிர் மற்றும் பொருட்சேதம் என்று விவரித்தார்.


Pengarang :