ALAM SEKITAR & CUACA

எல் நீனோ பருவ நிலை மாற்றத்தினால் ஜுன் வரை பெருமழை பெய்யும்

கோலாலம்பூர், மே 6:

எல் நீனோ பருவ நிலை மாற்றம் காரணமாக மலேசியா மற்றும் இந்தோனேசியா கடற்பகுதியோடு சேர்ந்த கண்டமும் பெரும் மழை தினந்தோறும் பெய்யும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. தெறக எல் நீனோ காற்றின் வேகம் ஏப்ரல்  இருந்து ஜுன் வரை தொடர்ந்து இருக்கும்.

மலேசிய தேசிய பல்கலைக்ககழகத்தின் சமூக விஞ்ஞானம் மற்றும்  மனிதவியல் பிரிவு தலைவர் பேராசிரியர் முனைவர் மஸ்தூரா மாமுட் கூறுகையில், நடுநிலையான பசிபிக் கடலில், கண்ட கடல் மேகங்களின் வெப்பச்சலனத்தினால் பெருமழை வரும் என்று தெரிவித்துள்ளது.

”   எப்போதும் பிப்ரவரி முதல் மார்ச் கடைசி வரை உலர்ந்த நிலையில் இருக்கும்.  ஆனால் இந்த ஆண்டு லா நீனாவின் மெத்தனத்தால் பசிபிக் கடலில் கொஞ்சம்  பாதிக்கப்படும். கடந்த சில வாரங்களாக கடுமையான மேகங்கள் மலாக்கா நீரிணையில் தென் தாய்லாந்து  இருந்து மலாக்கா வரை காணப்பட்டது,” என்று பிஎச் ஓன்லைனில் கூறினார்

முனைவர் மஸ்தூரா மேலும் கூறுகையில் மாலை நேரத்தில் இதனால் பெருமழை  ஏற்படும் என்றும் கூறினார்.


Pengarang :