NATIONALRENCANA PILIHAN

எஸ்பிஆர்எம், பொதுத் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை கெஅடிலான் கண்டிக்கிறது

 

ஷா ஆலம், மே 10:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர், டத்தோ ஸுல்கிப்லி அமாட் வெளியிட்ட அறிக்கையின் வழி தனது ஆணையம் தற்கால  அரசியல் சூழ்நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கூற்றை கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கண்டித்தார். ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ந்து சுயேட்சையான அரசு நிறுவனமாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்

”   இந்த அறிக்கை மிக வலுவற்ற நிலையை காட்டுகிறது. தொழில்முறையற்ற மற்றும் முயற்சியின்மை நிறைய தென்படுகிறது. ஊழல் தடுப்பு ஆணையம் அரசியல் பேச்சு எதற்கு? எஸ்பிஆர்எம் அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கிடையாது. ஏன் அரசியல் சூழ்நிலையை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்? இது நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

ஸுல்கிப்லி அமாட்டின் பதில் ஏற்றுக் கொள்ள முடியாது என்று விவரித்தார். இதற்கு முன்பு, ஸுல்கிப்லி எஸ்பிஆர்எம் 14வது பொதுத் தேர்தலுக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை மேற்கோள்காட்டி தியான் சுவா கண்டித்தார்.


Pengarang :