RENCANA PILIHANSELANGOR

கிள்ளான் மூன்றாவது பாலம் சாலை நெரிசலை குறைக்கும்

கிள்ளான், மே 24:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் முயற்சியின் விளைவாக கட்டப்பட்ட கிள்ளான் நகரின் மூன்றாவது பாலம் சாலை நெரிசலை குறைக்கும் அதேவேளையில் சிறந்த போக்குவரத்து முறையை ஏற்படுத்தும் என்று மாநில உள்கட்டமைப்பு & பொது வசதிகள், நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார். கிள்ளான் மூன்றாவது பாலத்தின் கட்டுமானப் பணிகள் ஜூலை 17 2014-இல் ஆரம்பித்து இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் முடியும் என்று விவரித்தார். இந்த கட்டுமானப் பணிகள் கிள்ளான் ஆற்றை கடக்க 1.7 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் மொத்த நீளம் 2.5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதாக கூறினார்.

”   சாலை பாதுகாப்பு தணிக்கை அறிக்கையின் (ஆர்எஸ்ஏ) அடிப்படையில் இன்று திறக்கப்பட்டது என்றும் பாலத்தின் வடிவமைப்பு பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு செயல்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்த திட்டம் மாநில அரசாங்கம் கையில் எடுத்து மக்களின் போக்குவரத்து பிரச்சினைகள் களைய முற்பட்டு வருவதில் மிக தீவிரமாக கொண்டிருப்பதை காட்டுகிறது,” என்று கிள்ளான் மூன்றாவது பாலத்தின் முன்-திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.

இதனிடையே கிள்ளான் மூன்றாவது பாலம் ரிம 199,156,069.39 செலவில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் சிறந்த நிதிநிலை நிர்வாகத்தில் கட்டப் பட்டதாகவும் கூறினார்.

 

=EZY=


Pengarang :