NATIONAL

சிகரெட் வாங்கும் & விற்கும் வயது ஏற்றப்பட்டது

ஷா ஆலம், மே 25:

சிகரெட் வாங்கும் மற்றும் விற்கும் வயது 21 ஆக அரசாங்கம் புதிய சட்ட திருத்த மசோதா கொண்டு வந்துள்ளதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஹில்மி யாயா கூறினார். இந்த வழிமுறைகள் புகையிலை மற்றும் புகைபிடிக்கும் கட்டுப்பாடு சட்டத்தில் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மேலும் கூறுகையில், 1983 உணவுகள் சட்ட திட்டத்திற்கு பதிலாக இந்த புகையிலை மற்றும் புகைபிடிக்கும் கட்டுப்பாடு சட்டத்தில் 21 வயது கீழ் சிகரெட் வாங்கும் மற்றும் விற்கும் வழிமுறைகள் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப் படும் என்று விவரித்தார். ‘நோன்பு மாத புதிய சுவாசம்’ எனும் தேசிய நிலையிலான பிரச்சாரத்தை தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.

இந்த புதிய வயது கட்டுப்பாடு பற்றி பேசிய போது, டாக்டர் ஹில்மி 21 வயதுக்கு கீழ் மனித மூளை வளர்ச்சி அடையும் நிலையில் இருப்பதால் புகைபிடிக்கும் பழக்கம் மூளை பாதிப்பு உண்டாகும் என்று விவரித்தார். மேலும் கூறுகையில், புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் பிரச்சாரம் கடந்த ஆண்டில் 10,000 பேர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தும் ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்றனர் என்று கூறினார்.

*பெர்னாமாவின்  செய்தி


Pengarang :