RENCANA PILIHANSELANGOR

சிலாங்கூரில் வேலை வாய்ப்புகள் 3,217,600-ஐ எட்டியது

ஷா ஆலம்,மே 23:

சிலாங்கூர் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் 2014-இல் 2,912,300 இருந்து 305,300 உயர்ந்த நிலையில் 2016-இல் 3,217,600 ஆகியது என்று மந்திரி பெசாரின் வியூக தொடர்புதுறை இயக்குனர் இன் ஷாவ் லூங் கூறினார். இந்த உயர்ந்த நிலை டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மந்திரி பெசார் பதவி ஏற்றதில் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது. இந்த நிலை மலேசிய நாட்டின் மொத்த வேலை வாய்ப்புகளில் 48.3% ஆகும். 2014-இல் இருந்து 2016 வரையில் மலேசியாவில் வேலை வாய்ப்புகள் 631,600 ஆக உயர்வு கண்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

”   சிலாங்கூர் மகளிர் 55% புதிய வேலை வாய்ப்புகளை பெற்றுள்ளதும் மற்றும் தேசிய ரீதியில் மகளிர் 40% மட்டுமே எட்டியது, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்று தெரிகிறது.சிலாங்கூரில் 2014-இல் மகளிர் வேலை வாய்ப்புகள் 40.3% இருந்து 2016-இல் 41.7% ஆக உயர்வு கண்டது. இதன் மூலம், சிலாங்கூர் மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் போது, மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது,” என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஷாவ் லூங் கூறுகையில், முகமட் அஸ்மின் தலைமையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிபுணத்துவ துறைகளில் குறிப்பாக நிர்வாகிகள், தொழில் முறை மற்றும் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. சிலாங்கூரின் நிபுணத்துவ துறைகளில் வேலை வாய்ப்புகள் 2014-இல் இருந்து 2016-வரை 16% மேல் உயர்ந்த நிலையில் தேசிய ரீதியில் 13.5% ஏற்றம் கண்டது சிலாங்கூர் மாநிலத்தின் சிறந்த நிர்வாகம் தெரிகிறது என்றும் கூறினார்.

”   2016-இல் மொத்த தொழிலாளர் எண்ணிக்கையான 3.2 மில்லியனில் 40%  நிபுணத்துவ வேலைகளில் சிலாங்கூர் மக்கள் இருப்பதாகவும், இது மலேசியா நிபுணத்துவ வேலைகளில் மூன்றில் ஒரு பங்கு சிலாங்கூர் வகிக்கிறது. மேலும் சிலாங்கூர் விவேக மாநிலமாக உருவெடுக்க டிஜிட்டல் பொருளாதார உருமாற்றம், 2016-இன் சிலாங்கூர் பட்ஜெட்டில்  ஸ்மார்ட் சிலாங்கூர் நன்முயற்சிகளின் வழி வகுக்கும்,” என்று கூறினார்


Pengarang :