ANTARABANGSA

டிரம்ப் தனது தனிப்பட்ட தொலைபேசி எண் வெளியிட்டது, தூதரக நடைமுறையை மீறினார்

குலோபல், மே 31:

அமெரிக்கா அதிபர் டோனால்டு டிரம்ப் தனது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை  முன்னணி உலக அரசியல் தலைவர்களுக்கு கொடுத்துள்ளது இதற்கு முன்பு அமெரிக்கா அதிபர்கள் இப்படி பட்ட  தூதரக நடைமுறைகளை பின்பற்றியது கிடையாது என்று பெயர் குறிப்பிடாத அமெரிக்கா அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று டெலிகிராப் அனைத்துலக செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.

மேலும் அந்த அதிகாரி கூறுகையில், டிரம்ப் தனது தொலைபேசி எண்ணை மெக்சிகோ, கனடா மற்றும் அண்மையில் வெற்றி பெற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் போன்றவர்களிடம் கொடுத்ததாக கூறினார். பென்தெகனின் முன்னாள் ஆலோசகர் டேரிக் ஸோலேட் பேசுகையில், இந்தச் செயல் உலக ரீதியில் டிரம்ப் நடவடிக்கைகளை அவ்வப்போது எதிரிகள் கவனித்து வர முடியும். உளவாளிகள் டிரம்ப் தனது தனிப்பட்ட தொலைபேசியில் பேசுவதை கேற்க முடியும் என்றும் அமெரிக்க தேசிய அமைதி இலாகாவின் ஆலோசகருமான அவர் கூறினார்.

தூதரக நடைமுறையில், டிரம்ப் நடவடிக்கை வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ தொடர்பை மீறி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்கா அதிபர் ஒரு தொடர்பு எண் மட்டுமே வெள்ளை மாளிகையில் பயன்படுத்தியதாகவும், இது உளவாளிகளின் நடவடிக்கைகளை தடுக்கலாம் என்று விவரித்தார்.


Pengarang :