PENDIDIKANSELANGOR

டிவிஇடி கல்வியை ஒருங்கிணைந்த செயல்பாடுகளோடு மேம்படுத்த முயற்சிகள் வேண்டும்

ஷா ஆலம், மே 20:

   சிலாங்கூர் மாநில அரசாங்கம், மறுசீரமைத்த தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை கல்வி (டிவிஇடி) திட்டத்தின் வழி தொழில்துறையினரோடு ஒத்துழைப்பு வழங்க உறுதி பூண்டுள்ளது என ஏழ்மை, பரிவு மிக்க அரசாங்கம் மற்றும் தோட்டத் தொழிலாளர் ஆட்சிக் குழு உறுப்பினர் வீ. கணபதி ராவ் தெரிவித்தார். இந்த நிலையில் மாநில அரசாங்கம் தொடர்ந்து நிபுணத்துவ துறைகளை கல்வி திட்டத்தில் இணைத்து பல்வேறு வியூகம் மற்றும் திசையை உருவாக்கி வருகிறது என்றார்.

   மேலும், இந்த நடவடிக்கை நிபுணத்துவ துறைகளை சிறந்த நிலைக்கு கொண்டு சென்று சிலாங்கூர் மாநிலம் நிபுணர்களை உருவாக்கும் எடுத்துக்காட்டு மாநிலமாக மாற்றம் காணும் என்பதில் சந்தேகமில்லை என்று விவரித்தார்.

”   இளையோர், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம் மற்றும் இயக்கிகளாக இருப்பது அவசியம். அறிவு வளர்ச்சி, நிபுணத்துவம் மற்றும் இளையோர்களின் சாத்தியமான தலைமைத்துவம் வாழ்க்கையில் எல்லா வழிகளிலும் வெற்றி பெற வழி வகுக்கும். இளையோரின் திறன், சாத்திய கூறுகள் போன்றவை மேம்படுத்தி மாநில அரசாங்கம் சிறந்த மனித மூலதனம், படைப்பாற்றல் மற்றும் புதுமையான இளையோருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி வருகிறது,” என்று விவரித்தார்.

கணபதிராவ் அவர்கள் இன்ஸ்பென்ஸ் கல்லூரியின் மாணவர்களுக்கு கடிதம் வழங்கிய பின் சிலாங்கூர் இன்றுவிற்கு வழங்கிய செய்தியில் தெரிவித்தார்.

இதனிடையே, மாண்புமிகு கணபதிராவ் இன்ஸ்பென்ஸ் கல்லூரி யின் டிசம்பர் 2016-இல் மொத்தம் 3217 மாணவர்கள் கல்வியை தொடர்ந்ததாகவும், இது குறிப்பாக ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்களின் கல்விச் சுமைகளை குறைக்க உதவும் பரிவு மிக்க மாநில அரசாங்கத்தின் திட்டமாகும் என்றார். ஏழை மாணவர்களுக்கு இலவச தொழில் திறன் பயிற்சிகளை வழங்கி வேலை வாய்ப்பையும் பெற்று தருகிறது என்று விவரித்தார்.

இதையடுத்து, இன்ஸ்பென்ஸ் கல்லூரி தொடர்ந்து மாநில அரசாங்கத்தின் நன்முயற்சிகளை சிறந்த மனித மூலதன மேம்பாடு, உயர்ந்த  நிபுணத்துவம் மற்றும் நேர்மறையான சிந்தனைகள் கொண்ட மாணவச் சமுதாயத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நினைவுறித்தனார்.

=EZY=


Pengarang :