RENCANA PILIHANSELANGOR

நான்கு அணைகளில் நீரின் அளவு 100% எட்டியது

ஷா ஆலம், மே 2:

சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (லுவாஸ்) நான்கு நீர் தேக்கி அணைகளிலும் நீர் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன் சுங்கை பூலோவில் குடிநீர் குழாய் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

லுவாஸின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் ஏழு அணைகளிலும் நீரின் அளவு 90%-ஆக உயர்வு பெற்றது என தெரிவித்துள்ளது. சிலாங்கூர் ஆற்றின் அளவு 100%-மாக உயர்ந்து 230 கன மீட்டரை எட்டியது.

மேலும் மூன்று அணைகளில், செமினி அணை 100%-ஆக 59.30 கன மீட்டராகவும்,  லங்காட்  அணை  (34.10 கன மீட்டர்) மற்றும் சுபாங்  ஏரி (4.21 கன மீட்டர்). சுங்கை லாபு நீர் தேக்கி 99.62%-த்தையும் சுங்கை திங்கி 93.57%. மேலும் கிள்ளான் கேட்ஸ் 91.18% மற்றும் 70.20%-ஆக  பத்துவும் எட்டியது குறிப்பிடத்தக்கது.


Pengarang :