RENCANA PILIHANSELANGOR

பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் மூலம் மக்களை பாதுகாக்க முடியும்

ரந்தாவ் பஞ்சாங், மே 27:

சுங்கை பினாங் சட்ட மன்றத்தில் கீழ் 79 வசதி குறைந்தவர்களுக்கு ஸ்மார்ட் சிலாங்கூர் உணவுப்பொருள் கூடை மற்றும் பெடுலி சேஹாட் சுகாதார அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சுங்கை பினாங் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ தேங் சாங் கிம் மாநில அரசாங்கம் மக்களின் சுமைகளை மேலும் குறைக்க மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று கூறினார். ரிம 3000 ஏழ்மை நிலைக்கான அடிப்படை வருமானமாக கொண்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவி அளித்து வருகிறது என்று விவரித்தார்.

”   கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது முதல் ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட் சிலாங்கூர் உணவு பொருள் கூடை, தேர்வு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்கப் பட்டுள்ளது. மாநில அரசாங்கம் இந்த நடவடிக்கையின் மூலம் நிலைத்தன்மையற்ற பொருளாதார சூழ்நிலையில் மக்களின் சுமைகளை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்,” என்று பலேம்பாங் பொது மண்டபத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிலாங்கூர் உணவுப்பொருள் கூடை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது கூறினார்.

இதில் 35 குடும்பங்கள் உணவுப்பொருள் கூடையும் மற்றும் 44 குடும்பங்கள் பெடுலி சேஹாட் சுகாதார அட்டைகளும் பெற்றுக் கொண்டனர். மாநில முதலீடு, வாணிபம், சிறு மற்றும் நடுத்தர தொழில் மற்றும் போக்குவரத்து ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ தேங், இது மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி ஆரம்பித்த பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகள் (ஐபிஆர்) 19 திட்ங்களில் இந்த இரண்டும் அடங்கும் என்றார்.

”   சிலாங்கூர் மட்டுமே இப்படியான மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியும். இந்த திட்டங்கள் சாத்தியமாக காரணம் சிறந்த நிதிநிலை நிர்வாகமே,” என்று கூறினார்.

இதனிடையே, ரந்தாவ் பஞ்சாங் கிராம மேம்பாட்டு மற்றும் பாதுகாப்பு குழுத் தலைவர் அப்துல் காலிட் காப், மாநில அரசாங்கத்திற்கு பொது மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

உணவுப்பொருள் கூடை பெற்றுக் கொண்ட, நூர் பைஃசா ரம்லி, வயது 46, பேசுகையில் தமது குடும்பத்தினரின் சமையலறையின் பொருட்கள் வாங்கும் சுமையை மாநில அரசாங்கம் குறைத்துள்ள செயலுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்று விவரித்தார்.


Pengarang :