SELANGOR

பிஏசி மூன்றாவது கிள்ளான் பாலத்தின் கட்டுமான பணிகளைக் கண்டு மனநிறைவு

கிள்ளான், மே 25:

பொது கணக்கறிக்கை குழு (பிஏசி) பொது மக்களுக்கு திறக்கப்பட்ட கிள்ளான் மூன்றாவது பாலத்தின் கட்டுமான பணிகளை மேற்பார்வையிட்ட பிறகு மனநிறைவு அடைவதாக அறிவித்துள்ளது. பிஏசியின் தலைவர், எங் சுவி லிம் கூறுகையில் பொதுப் பணித் துறையின் விளக்கத்தை கேட்டு விட்டதாகவும் தெரிவித்தார். ரிம200 மில்லியன் செலவில் கட்டப்பட்ட கிள்ளான் நகரின் மூன்றாவது பாலம் அண்மையில் மாநில தணிக்கை இலாகாவின் தலைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு, எங் சுவி லிம் மற்றும் மற்ற பிஏசியின் உறுப்பினர்களான ரோஸ்ஸியா இஸ்மாயில், எங் தியான் சின், டாக்டர் அப்துல் ரானி ஓஸ்மான் தணிக்கை இலாகாவின் அதிகாரிகள் உடன் கிள்ளான் நகரின் மூன்றாவது பாலத்திற்கு வருகை மேற்கொண்டனர்.  நேற்று மாநில உள்கட்டமைப்பு, நவீன விவசாயம் மற்றும் விவசாய அடிப்படை தொழில் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் இந்த பாலத்தின் முன்னோட்ட திறப்பு விழாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

ஜைடி கூறுகையில், பாலத்தின் கட்டுமான பணிகள் மொத்த செலவு ரிம 199,156,069.39 ஆகும். மாநில அரசாங்கம் இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு கட்டுமான பணிகளை முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Pengarang :