MEDIA STATEMENT

பில்கெஎன் உருமாற்றம் வெறும் கண்துடைப்பு நாடகமே

தேசிய சேவை பயிற்சி திட்டம்  (பிஎல்கேஎன்) தற்போது உருமாற்றம் பெற்று புதிய தோற்றத்தில் பயிற்சிகள், பிஎல்கேஎன் 2.0 என்று அழைக்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது தெரிந்த ஒன்றுதான். பல நூறு மில்லியன் செலவில் நடத்தப் பட்ட திட்டங்கள் எந்த ஒரு பலனை அளிக்காமல் விரயம் ஆனது நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது. எந்த ஒரு திட்டமும் தோல்வி அடையும் போது, அரசாங்கம் புதிய வழிமுறையை முயன்று தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.

அரசாங்கம் அனைத்து பரிந்துரைகளையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். இதில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கொடுக்கும் ஆலோசனைகளையும் நினைவில் கொண்டு பிஎல்கேஎன் திட்டத்தை மேம்படுத்த வேண்டுமே தவிர  சுய மகிழ்ச்சி அடைவதற்கு திட்டமிட்டு செயல்படுத்தக்கூடாது.கடந்த மார்ச் 17 2016-இல், பிரதமர் துறை அமைச்சர், டத்தோ ஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் வெளியிட்ட செய்தியில் அரசாங்கம் 744 மாணவர்களின் உபகாரச் சம்பளத்தை மீட்டுக் கொண்டதை தொடர்ந்து ரிம 240 மில்லியன் சேமித்ததாக கூறினார்.

மாணவர்களின் உபகாரச் சம்பளத்தை விட பிஎல்கேஎன் நாட்டிற்கு வீண் விரயம் இல்லையா? சுய மகிழ்ச்சி அடைவதற்கு ஒரு திட்டம், ஆனால் வருடம் தோறும் கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு. பிஎல்கேஎன் திட்டம், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கத்தின் குத்தகைதாரர்கள் மற்றும் தளவாடங்களின் விநியோகிப்பாளர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் நன்மைக்காகவா? அல்லது அரசாங்கத்தின் அரசியல் நோக்கத்திற்காகவா?

 

Datuk Seri Dr Santhara

 

 

 

 

 

 

 

மேலும், பேங்க் நெகாராவின் முன்னாள் துணை கவர்னர், டான்ஸ்ரீ அர்ஷாட் ஆயோப்பின் பரிந்துரைத்த ரப்பர் மரம் சீவுதல், செம்பனை பழம் அறுத்தல் மற்றும் நெல் பயிரிடல் போன்ற நமது பாரம்பரிய தொழில் திறன் பயிற்சிகளை இளையோருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும், ஏனெனில் இந்த துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

பிஎல்கேஎன்-இல் நடத்தப்படும் பாடத்திட்டம் திறமையற்ற மற்றும் முக்கியத்துவம் இல்லாத தோற்றத்தில் உள்ளது.

இறுதியாக, சிறந்த ஒரு தீர்வு காண வேண்டுமாயின் சிக்கல்கள் தீர்க்க சரியான வியூகம் அமைத்து, திறன் மிக்க செயல்பாடுகள் கொண்டு பிஎல்கேஎன் திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்த வேண்டும் நினைக்கிறேன்.

* டத்தோ ஸ்ரீ முனைவர் எட்மன்ட் சந்தாரா

கெஅடிலான் கட்சியின் ஒருங்கிணைப்பு பிரிவு தலைவர்


Pengarang :