RENCANA PILIHANSELANGOR

புத்ராஜெயா சிலாங்கூரின் புதிய அரசியல் சித்தாந்தத்தை கற்றுக் கொள்ள வேண்டும்

ஷா ஆலம், மே 9:

மக்களாட்சி நடைமுறையில் சிலாங்கூர்  மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசியல் சித்தாந்த வழிமுறையை புத்ராஜெயா அரசாங்கம் பின் பற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.

கோத்தா அங்ரிக் சட்ட மன்ற உறுப்பினர் யாக்கோப் சப்பாரி கூறுகையில், அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம் புத்ராஜெயாவில் மக்களாட்சி தத்துவத்தை வளர்ச்சியடைய விடாமல் தடுக்கிறது என்று கூறினார்.

”   நீண்டகால  ஆட்சியில் அமர்ந்திருக்கும்  அம்னோ பிஎன் அரசாங்கம் நோக்கத்தில்  இருந்து விலகி விட்டார்கள். மேற்கத்திய நாடுகளில்  அரசாங்கங்கள் மாறி மாறி தேர்ந்தெடுப்பார்கள். சிலாங்கூர் மாநிலத்தை எடுத்துக் கொள்வோம், பாக்காத்தான்  ஆட்சி மாற்றத்திற்கு பிறகு லஞ்ச ஊழல் கட்டுப்படுத்த பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவருக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. மக்களுக்கு மற்றும்  எதிர் கட்சிகளுக்கு முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டது. இது தான் புதிய அரசியல் வழிமுறை. சிலாங்கூரில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.

   பெருமை அளிக்கும் வகையில் இருப்பதாக கூறியவர் தொடர்ந்து மக்களாட்சி நடைமுறையில் மற்றும் வெளிப்படையான நிர்வாகம் போன்ற அம்சங்கள் சிலாங்கூரை ஒரு நேர்மையான மற்றும் சுதந்திரமாக செயல்படும் அரசாங்கமாக காட்டுகிறது என்றால் மிகையாகாது. இந்த செயல்பாடுகள், சிறந்த வெளிப்படைக் கொள்கைகளை கொண்டிருக்கும் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தலைமையின் கீழ் இயங்கும் சிலாங்கூர் மாநிலமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :