RENCANA PILIHANSELANGOR

மக்களாட்சி முறையில் முதிர்ச்சியான அரசியல்

ஷா ஆலம், மே 11:

தேசிய முன்னணியுடன் பொதுத் தேர்தலில் நேருக்கு நேர் மோதல் ஏற்படுத்த அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மக்களுக்கு நாட்டின் நிர்வாகம் செய்யும் கட்சியை தேர்ந்தெடுக்க சுலபமாக இருக்கும். கோத்தா அங்ரிக் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் யாக்கோப் சப்பாரி கூறுகையில், இந்த வியூகம் சிறந்த முறையில் பலனை அளிக்கும் என்றும் மக்களின் நம்பிக்கையை பெற்று தேர்தலில் வெற்றி பெறலாம். இந்த நாட்டில் யார் வேண்டுமானாலும் மக்களாட்சி நடைமுறைப் படி  கட்சியை பதிவு செய்யலாம் என கூறினாார்.

”   எல்லா கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை  அமைப்பதில் உரிமை உண்டு. ஒரு கட்சி இன்னொரு கட்சியை அழிக்க முடியாது. ஜனநாயகத்தை அடிப்படையில் தேர்தலில் ஈடுபடும் போது ஜனநாயகவாதியாக சிந்தனைகள் வேண்டும்,” என்று தனது அகப்பக்கத்தில் கூறினார்.

YAAKOB

 

 

 

 

 

 

மலேசியாவில் பல்வேறு கட்சிகளின் தோற்றங்களை பற்றியும் அதே பக்கத்தில் நினைவு கூர்ந்தார். இதையடுத்து புதிய கட்சிகளின் வருகையைக் கண்டு கவலைப் பட வேண்டாம் ஏனெனில்  இது மக்களாட்சி தத்துவத்தில் நடைமுறையாகும். பல்வேறு சித்தாந்தங்களில் வேறுபட்டாலும் தேசிய முன்னணியை வீழ்த்த அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


Pengarang :