RENCANA PILIHANSELANGOR

மந்திரி பெசார்: வியாபார உரிமங்களை தவறாக பயன்படுத்தும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்றம் ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறேன்

ஷா ஆலம், மே 28:

மாநில அரசாங்கம் சிலாங்கூரில் ஆரோக்கியமற்ற செயலில் ஈடுபட்டு வரும் பொழுது போக்கு மையங்கள் மீது காவல்துறை மற்றும் ஊராட்சி மன்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையை வரவேற்கிறது என்று மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். காவல்துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஏனெனில் மாநில மக்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்பு மிக்க மாநிலமாக உருவெடுக்க இது முக்கியம் என்றார்.

”   மாநில அரசாங்கம் ஆரோக்கியமற்ற செயலில் ஈடுபட்டு வருவோரை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அமலாக்க நடவடிக்கைகளை அனைவரும் செவ்வென செய்தல் அவசியம். காவல்துறையின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஏனெனில் ஊராட்சி மன்றத்தின் அதிகார வரம்பு மிக குறைவு,” என்று கூறினார்.

தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார், மாநில அரசாங்கம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் பொழுதுபோக்கு மையங்களுக்கு வியாபார உரிமம் வழங்கக்கூடாது என்ற அறிக்கையை மேற்கோள்காட்டி அஸ்மின் கருத்து தெரிவித்தார். இந்த சூழ்நிலையில் மாநில அரசாங்கம் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”   நாம் எந்த சட்ட திட்டங்கள் வழி வியாபார உரிமங்களை வெளியிடுகிறது மற்றும் அமலாக்கத்தில் யாருடைய அதிகாரம் உண்டு போன்ற அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கி பார்க்க வேண்டும். ஆக முக்கியம், மாநில அரசாங்கம், ஊராட்சி மன்றம் மற்றும் காவல்துறை ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்க வேண்டும்,” என்று விவரித்தார்.


Pengarang :