SELANGORWANITA & KEBAJIKAN

மெமோகிரம் பரிசோதனை நோன்பு மாதத்தில் தொடர்ந்து பத்து தீகா சட்ட மன்றத்தில் நடைபெறும்

ஷா ஆலம், மே 31:

பத்து தீகா சட்ட மன்றம் தொடர்ந்து மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இலவச மெமோகிரம் பரிசோதனை சேவையை வழங்கி வருகிறது என்று பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். இந்தச் சேவை புனித நோன்பு மாதத்தில் தொடரும் என்றார்.

”   மக்களின் அமோக ஆதரவை மேற்கொண்டு பத்து தீகா சட்ட மன்ற சேவை மையம், இலவச மார்பக புற்றுநோய் பரிசோதனையான மெமோகிரம் ஒவ்வொரு சனிக்கிழமைகளில் நடைபெறும், மாறாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அல்ல. இந்த மாற்றம் நோன்பு மாதத்தை மதித்து செய்யப் பட்டுள்ளது,” என்று கூறினார்.

மெமோகிரம் பரிசோதனை செக்சன் 20-இல் அமைந்துள்ள கெபிஜே மருத்துவ நிலையத்தில் நண்பகல் 12 மணியிலிருந்து மாலை 3 மணி வரை நீடிக்கும். இந்த பரிசோதனை 35 வயதுக்கு மேல் உள்ள சிலாங்கூர் வாழ் மகளிருக்கு மட்டும் பொருந்தும் என்று கூறினார். மெமோகிரம் இலவச பரிசோதனை பெற்று கொள்ள பத்து தீகா சட்ட மன்ற சேவை மன்றத்தின் தொலைபேசி எண் 019-2686879 தொடர்பு கொள்ளவும்.

இதனிடையே, மெமோகிரம் பரிசோதனை நவம்பர் 2010-இல் ஆரம்பிக்கப்பட்ட மெமோசெல் திட்டத்தின் கீழ் சிலாங்கூர் வாழ் மகளிருக்கு மட்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் 2016-இல் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை சேர்க்கப்பட்டது. இது சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலத்துறை ஆட்சிக் குழுவின் கீழ் உள்ளது.


Pengarang :