ECONOMY

ரேம்: ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 4.4%-ஆக இறங்கியது

கோலாலம்பூர், மே 17:

ரேம் மதிப்பீடு நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மலேசியா நாட்டின் பணவீக்கம் 4.4% இருந்தது என்றும், இது மார்ச் மாதத்தில் 5.1% ஆக இருந்தது என்று கூறியுள்ளது. இந்த நிலை போக்குவரத்து எரிபொருள் விலையின் வீழ்ச்சி அடைந்ததால் என்று விவரித்தது. ‘எகோநோமிக் இன்சைட்’ இதழில் வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக மதிப்பீடு நிறுவனமான ரேம், போக்குவரத்து எரிபொருள் விலை நேரிடையாக பணவீக்கத்தை பாதிக்கும் என்று கூறியது.

ரேம் மதிப்பீடு நிறுவனம் மேலும் கூறுகையில், மது அல்லாத பொருட்களின் விலை நிரந்தரமில்லாமல் இருந்து வருவதும் பணவீக்கத்தை பாதிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 2016-இல் சமையல் எண்ணெய்யின் அரசாங்கத்தின் மான்யங்கள் நீக்கப்பட்டதின் வாயிலாக மீன், கடல் சார்ந்த உணவுகள், காய்கறிகள் மற்றும் உணவுகளின் விலை உயர்வு கண்டது குறிப்பிடத்தக்கது.

”   வீட்டின் வெளியே உணவுகளின் விலை மது அல்லாத உணவு பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்தி உள்ளது. பயனீட்டாளர் விலை குறியீட்டில் 36.8% இது பட்டியல் இடப்பட்டுள்ளது,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளது.


Pengarang :