SUKANKINI

மலேசிய கிண்ணம் : பிகேஎன்எஸ் எஃப்சி ‘பி’ பிரிவு, சிலாங்கூர் ‘டி’ பிரிவு

ஷா ஆலம், மே 23:

பிகேஎன்எஸ் எஃப்சி பி குழுவிலும் சிலாங்கூர் டி குழுவிலும் மலேசிய கிண்ண கால்பந்து போட்டியில்   குலுக்கல் முறையில் தேர்வு செய்யப் பட்டுள்ளது. 91-வது முறையாக நடத்தப்படும் 2017-ஆன மலேசிய கிண்ணத்தை வெல்ல ரேட் என்ஸ் எனப்படும் பிகேஎன்எஸ் எஃப்சி, பேராக், பெல்டா யுனைடெட்  மற்றும் கோலாலம்பூர் குழுக்களுடன் பலப் பரிட்சை நடத்தும்.

சூப்பர் லீக் முதல் சுற்றுப் போட்டியில் பிகேஎன்எஸ் எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் பேராக்கை வெற்றி கண்டது. ஆனால் பெல்டா யுனைடெட்டிடம் 1-0 கணக்கில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே 2016-இன் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்த சிலாங்கூர் குழு ‘மரணக் குழுவில்’ ஜெடிதி, சரவாக் மற்றும் திரெங்கானு போன்ற பலம் பொருந்திய குழுக்களுடன் தேர்வு செய்யப் பட்டுள்ளது. சூப்பர் லீக் முதல் சுற்று போட்டியில் சரவாக் மற்றும் ஜேடிதி உடன் சமநிலை கண்டது குறிப்பிடத்தக்கது.

2016-இன் மலேசிய கிண்ண வெற்றியாளர் கெடா குழு சி பிரிவில் கிளாந்தான், மலாக்கா யுனைடெட் மற்றும் யுஐடிஎம் எப்ஃசி குழுக்களுடன் இடம் பெற்றுள்ளது.

மலேசிய கிண்ண குழு நிலையிலான ஆட்டங்கள் ஜூலை 4 இருந்து ஆகஸ்ட் 8 வரை நடைபெறும். முதல் இரண்டு இடங்களை பெறும் குழுக்கள் கால் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
 A பிரிவு 
– பகாங்
– தி-டீம்
– நெகிரி செம்பிலான்
– பிகேஎன்எஸ் எஃப்சி

B பிரிவு 
– பேராாக்
– பெல்டா யுனைடெட்
– பிகேஎன்எஸ் எஃப்சி
– கோலாலம்பூர்

Kumpulan C
– கெடா
– கிளாந்தான்
– மலாக்கா யுனைடெட்
– யுஐடிஎம் எப்ஃசி

Kumpulan D
– ஜெடிதி
– சிலாங்கூர்
– சரவாக்
– திரெங்கானு

 


Pengarang :