சுங்கத்துறை 60 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை ரத்து செய்தது | Selangorkini


About the contributor

Norway

Pengarang

kgsekar

சுங்கத்துறை 60 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி அமலாக்கத்தை ரத்து செய்தது

ஷா ஆலம், ஜூன் 19:

மலேசிய அரச சுங்கத்துறை இலாகா (சுங்கத்துறை) எதிர் வரும் ஜூலை 1-இல் இருந்து 60 உணவுப் பொருட்களுக்கான பொருட்கள் மற்றும் சேவை வரி அமல்படுத்த இருந்த நடவடிக்கையை ரத்து செய்தது என்று மலேசிய சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சுப்பிரமணியம் தொளசி தெரிவித்தார்.

60  வகையான பொருட்கள் எதிர் வரும் ஜூலை 1-இல் இருந்து பொருட்கள் மற்றும் சேவை வரி  (ஜிஎஸ்டி) விதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அறிவிப்பு செய்துள்ள பொருட்களில் கடல் உணவுகள் (விலாங்கு, மீன்), கீரை வகைகள் (உருளைக்கிழங்கு, பயிற்றங்காய், கச்சான்,தண்டுக் கீரை, இனிப்பு சோளம்), இறக்குமதி செய்யப்படும் பழ வகைகள் (அவோகாடோ, அராப்பழம், திராட்சை, சேரி மற்றும் பேரி), தேயிலை, காப்பி, மசாலா மற்றும் மீட்பு ( மீ ஹூன், கொய்தியாவ் & லக்ஸா மீ போன்றவை அடங்கும்) மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற உணவு பொருட்கள் பட்டியல் இடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


”    சுங்கத்துறை நிதி அமைச்சை கலந்து ஆலோசித்த பிறகே ரத்து செய்யும் முடிவு எடுத்தோம்,” என்று தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு மலேசிய மக்கள் அடுத்த மாதம் நடப்புக்கு வரும் 60 உணவுப் பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பதாக வந்த தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

GST

 

 

 

 

 

அப்படி இந்த பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்ததால் பீ ஹூன், கொய்தியாவ், மீ லக்ஸா மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவை விலையேற்றத்திற்கு உள்ளாகும். சுங்கத்துறை ரத்து செய்யப்பட்ட செய்தியை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருமாறு சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார்.

வரிவிலக்கு அளிக்கப்படும் பொருட்களின் முழுமையான விவரங்களுக்கு இணைய தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

gst.customs.gov.my atau www.federalgazette.agc.gov.my.

#கேஜிஎஸ்

RELATED NEWS

Prev
Next