NATIONAL

அமைச்சர் சிலாங்கூரை குறிவைத்து மற்ற மாநிலங்களை புறக்கணிக்கிறது

ஷா ஆலம், ஜூன் 16:

சிலாங்கூரை கைப்பற்றும் குறிக்கோளாக கொண்டு மற்ற மாநிலங்களில் ஏற்படும் அடுக்குமாடி குடியிருப்பு சிக்கல்களை, நகர நல்வாழ்வு, வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சர் டான்ஸ்ரீ நோ ஒமார் புறக்கணிப்பதாக ஜோகூர் பொது மக்கள் புகார் மையத்தின் (பிஏஆர்) தலைவர் அப்துல் அஸிஸ் அப்துல்லா கூறினார். மேலும் அவர் கூறுகையில், நோ ஒமார் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றும் குறிக்கோளாக அலைந்து திரியும் வேளையில் அவர் அம்மாநிலத்தில் மிகச் சிறந்த வீடமைப்பு திட்டம் இருப்பதை மறந்து விட்டதாக தெரிவித்தார். வீடமைப்பு சிக்கல்கள் பூதாகரமாக ஆகும் முன்னர் மற்ற மாநிலங்களையும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

rumah-ppr

 

 

 

 

 

”  சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றும் முயற்சியை மட்டும் செயல்படுத்தி மற்ற மாநிலங்களை பலிகடாவாக ஆக்க வேண்டாம். அமைச்சர் மற்றும் அமைச்சு மற்ற மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். ஆனால் நிலைமையை பார்க்கும் போது சிலாங்கூர் மாநிலத்திற்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இருப்பதை வருகிறோம்,” என்று அகப்பக்கத்தில் கூறியதாக சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் பகிர்ந்து கொண்டார்.

அகப்பக்கத்தில் அஸிஸ் தனது பொறுப்புள்ள  அரசு சார்பற்ற இயக்கம் நடவடிக்கையில் இறங்கி அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் களத்தில் மக்களை சந்தித்து பல்வேறு சிக்கல்களை கண்டு பிடிக்கப்பட்டதாக கூறினார்.

”   சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதி பாசிர் கூடாங் தாமான் மெகா ரியாவில் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 17 கட்டிடங்கள் கொண்ட நிலையில் குப்பைகள் ஆங்காங்கே குன்றுகளாக குவித்து வைத்துள்ளனர். இந்த நிலை ஏற்படக் காரணம் குடியிருப்பு பகுதியின் மோசமான நிர்வாகமே ஆகும்,” என்று கூறினார்.

மேலும் கூறுகையில் அவர் நோ ஒமார் எல்லா மாநிலங்களை புறக்கணிக்காமல் அமைச்சர் என்ற முறையில் நியாயமாக நடந்து கொள்வது அவசியம் என்று கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :