SELANGOR

ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவ் மாநில அரசாங்க அதிகாரிகளுடன் நோன்பு துறக்கும் நிகழ்வு

ஷா ஆலம், ஜூன் 20:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின்   வறுமை ஒழிப்பு நிரந்தரக் ஆட்சிக் குழுவின் கீழ் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி மற்றும் ரமலான் மாத ‘சீனார் காசே’ 2017 ஆகிய நிகழ்வுகள் மாண்புமிகு கணபதி ராவ் தலைமையில் ஷா ஆலம் கோன்கோட் தங்கும் விடுதியில் நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

ஆட்சிக் குழு உறுப்பினரோடு பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில், ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சாமாட் மற்றும் சிலாங்கூர் மாநில அரசாங்க அதிகாரிகளும் ஒன்றிணைந்து நோன்பு துறந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கணபதி ராவ் இன்ஸ்பென்ஸ் அனைத்துலக கல்லூரி நிர்வாகத்திற்கு ரிம 4 மில்லியன் மாநில உதவி நிதியாக வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்ப பயிற்சிகள் இலவசமாக வழங்கும் இன்ஸ்பென்ஸ் கல்லூரி தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்றிட இது வழிவகுக்கும் என்று கணபதி ராவ் கூறினார்.

#கேஜிஎஸ்


Pengarang :