RENCANA PILIHANSELANGOR

ஆட்சிக் குழு உறுப்பினர்: டெங்கு ஒழிப்பு, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

ஷா ஆலம், ஜூன் 27:

ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் பொறுப்பு மாநில அரசாங்கத்தை மட்டும் சார்ந்தது அல்ல மாறாக பொது மக்கள் டெங்கு காய்ச்சலின் ஆபத்தை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சிலாங்கூர் மாநில சுகாதாரம், சமூக நலம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறினார். எல்லா தரப்பினரும் தங்களின் கடமையை உணர்ந்து சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து ஏடிஸ் பெருக்கத்தை தடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

”   ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்பு ஆட்சிக் குழு உறுப்பினர், ஊராட்சி மன்றம் அல்லது மந்திரி பெசாரின் பொறுப்பு மட்டும் அல்ல. மாறாக சமூக தலைவர்கள் மற்றும் பொது மக்கள் ஏடிஸ் கொசுக்களின் ஆபத்தை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக இருத்தல் அவசியம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஏடிஸ் கொசுக்கள் அபிவிருத்தியை தடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் டெங்கு காய்ச்சல் மரணத்தின் வாசலில் கொண்டுச் செல்லும்,” என்று டரோயா விவரித்தார்.

 

 

 

 

 

 

சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து வைப்பது பொது மக்கள் தங்களின் தலையாய கடமையாக கொண்டு செயல்பட வேண்டும். ஏடிஸ் கொசுக்களின் அபிவிருத்தியை இதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

DENGGI-GRAFIK

 

 

 

 

 

டரோயா தொடர்ந்து தனது செய்தியில், தனது கீழ் செயல்படும் ஆட்சிக் குழு ஏடிஸ் கொசுக்களின் அபிவிருத்தியை தடுக்க லார்வாக்களை அழிக்கும் மருந்து தெளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இதன் மூலம் ஏடிஸ் கொசுக்களின் அபிவிருத்தியை தொடக்கத்திலேயே தடுத்து விடலாம் என்று தெளிவு படுத்தினார்.

#கேஜிஎஸ்


Pengarang :