RENCANA PILIHANSELANGOR

உலு லங்காட் இரண்டாம் கட்ட வெள்ள நிவாரண நிதி வழங்கப்பட்டது

உலு லங்காட், ஜூன் 23:

உலு லங்காட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசாங்கம் மற்றும் மந்திரி பெசார் பெறுநிறுவனம் (எம்பிஐ) அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கியுள்ளது. இதில் மொத்தம் 91 குடும்பங்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில சமூக நலம், சுகாதாரம், மகளிர் மற்றும் குடும்ப நலன் ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் டரோயா அல்வி கூறுகையில் ஒவ்வொரு குடும்பங்களும் மாவட்ட அலுவலகத்தின் வழி பட்டியல் இடப்பட்டு ரிம 1000 பெற்றனர் என்று தெரிவித்தார். முதல் கட்ட நிவாரண நிதி 32 குடும்பங்களுக்கு கடந்த ஜூன் 22-இல் வழங்கப்பட்டன என்றும் மீதம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனிடையே எம்பிஐயின் தலைமை செயல் அதிகாரி சோபான் அமினுடின் பேசுகையில், தங்களின் நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்குவதில் பெருமை அளிப்பதாக உள்ளது என்று விவரித்தார். எம்பிஐ கீழ் செயல்படும் 30 துணை நிறுவனங்கள் நிதியை சேகரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பது தங்களின் தலையாய கடமைகளில் ஒன்று என்று விவரித்தார்.

IMG_1683


Pengarang :