RENCANA PILIHANSELANGOR

உலு லங்காட் வெள்ளத்திற்கு மறுசீரமைப்பு பணிகள் காரணமல்ல

ஷா ஆலம், ஜூன் 23:

அண்மையில் உலு லங்காட்டில் ஏற்பட்ட வெள்ளம் மறுசீரமைப்பு பணிகளால் அல்ல மாறாக தொடர்ச்சியாக பெய்த மழையினாலே ஆகும் என்று சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு, பொது வசதிகள், நவீன விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் ஜைடி அப்துல் தாலிப் கூறினார். இரண்டு மணி நேரம் தொடர்ந்து பெய்த 135 மில்லி லிட்டர் அளவிலான கனத்த மழையினால் இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்று விவரித்தார். மேலும் கூறுகையில் வடிகால் மறுசீரமைப்பு பணிகள் மிக சீராக நடந்து கொண்டு வருகிறது என்றாார்.

” இது வரை மறுசீரமைப்பு தொடர்பாகவும், அடைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகளாலும் வெள்ளம் ஏற்பட்ட செய்தி அல்லது அறிக்கை ஏதும் இல்லை. அனைத்து தரப்பினரும், மேம்பாட்டு பணிகள் அல்லது மறுசீரமைப்பு பணிகள் சரியான முறையில் திட்டமிட்டு செயல் படவேண்டும் ஏனெனில் எந்த நேரத்திலும் மழை பெய்து வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

Zaidy Abdul Talib (1)

 

 

 

 

 

தொடர்ந்து பேசுகையில், ஜைடி மாநில அரசாங்கம் ஊராட்சி மன்றங்கள் வழியாக லங்காட் 2 மற்றும் கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை திட்டம் போன்ற மேம்பாட்டு திட்டங்கள் சிறந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றும் வெள்ளம் ஏற்படாமல் தடுக்க வழிமுறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :