NATIONAL

எப்ஜிவி மறுசீரமைப்பு: சுலைமான் மாஹ்போப், ஈசா சாமாட்-க்கு பதில் நியமனம்?

ஷா ஆலம், ஜூன் 19:

பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தில் (எப்ஜிவி) மறுசீரமைப்பு செய்யும் நடைமுறையில் டான்ஸ்ரீ முகமட் ஈசா சாமாட் அதன் தலைவர் பதவியில் இருந்து இன்று மாற்றப்படுவார் என்று பெரித்தா ஹாரியான் மற்றும் நியூ ஸ்தீரிட் டைம்ஸ் ஆகிய நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளது. இவைகளின் தகவல் படி டெலிகோம்ஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் சுலைமான் மாஹ்போப், ஈசா சாமாட்-இன் இடத்தை நிரப்புவார் என்று தெரிகிறது.

நேற்று பெல்டாவின் ஆலோசகர், டான்ஸ்ரீ ஷாரிர் சாமாட் கூறுகையில், எப்ஜிவியின் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் நிகழும் என்று கூறினார். ஆனால் இந்த மாற்றத்தில் முகமட் ஈசா பெயர் இருப்பதாக கூறவில்லை. இதற்கு முன்பு, எப்ஜிவியின் இயக்குனர் வாரியம், நிர்வாக கோளாறுகளினால்  அதன் தலைவர் ஈசா சாமாட் , தலைமை செயல் அதிகாரி டத்தோ ஸாக்காரியா அர்ஷாட் மற்றும் சில தலைமை நிர்வாகிகள் ஆகியோரை தற்காலிக விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஸாக்காரியா அர்ஷாட் வெளியிட்ட அறிக்கையில் ஏற்றுக் கொள்ள முடியாத கோடிக்கணக்கான முதலீடுகளை தடுக்க முயற்சி எடுத்ததாக கூறினார். இயக்குனர் வாரியம் பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ் சம்பந்தப்படாத துறைகளில் முதலீடு செய்ய முனைப்பு காட்டியதால் தாம் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, அண்மையில் எப்ஜிவியில் ஏற்பட்ட நெருக்கடியை விசாரிக்க சுயேட்சை விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட டத்தோ ஸ்ரீ இட்ரிஸ் ஜாலா தனது அறிக்கையை பூர்த்தி செய்து விட்டதாக தெரிவித்தார்.

ஆனாலும் நாட்டின் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் பெல்டா குலோபல் வென்ட்ச்ர் ஹோல்டிங்ஸ்-இல் நடந்த மோசடி விசாரணை அறிக்கையை சரியான நேரத்தில் அறிவிப்பு செய்யப்படும் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

#கேஜிஎஸ்


Pengarang :