ANTARABANGSA

எம்எச்725 மாஸ் விமானம் பண்டாரா சுகார்னோ-ஹாத்தாவில் அவசரமாக தரையிறங்கியது

ஜாகர்த்தா, ஜூன் 13:

மலேசிய விமான நிறுவனத்தின் (மாஸ்) எம்எச்725 விமானம் பந்தென், செங்காரேங், பண்டாரா சுகார்னோ-ஹாத்தா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது என்று அதில் பயணித்த புக்கிட் காட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் சம்சுல் இஸ்கண்டர் தனது அகப்பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

”   எம்எச்725, மோசமான வானிலை மற்றும் விமானத்தின் வலது சக்கரம் உடைந்த நிலையில் மூன்று மணி நேர பயணத்திற்கு பிறகு தரையிறங்கியதிற்கு எல்லா வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தற்போது விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் இருந்து அவசர உதவிக்கு காத்துக் கொண்டிருக்கிறோம்,” என்று சம்சுல் இஸ்கண்டர் முகமட் அகீன் கூறினார்.

19059130_10154446359252063_4718937442654249519_n (1)

 

 

 

 

 

 

 

 

பிளைட்வேர்.கோம் தகவலின் படி எம்எச்725 விமானம் 1 மணி ஐந்து நிமிடம் தாமதமாக தரையிறங்கியது. இந்த சம்பவம் அனைத்துலக நேரப்படி ஏறக்குறைய 20.04-க்கு நடந்தது என்று கூறப்படுகிறது.

DCNgx40V0AAqLff

 

=EZY=


Pengarang :