PBTSELANGOR

எம்பிஎஸ்ஏ 550 தலைக் கவசங்களை இலவசமாக வழங்கியது

ஷா ஆலம், ஜூன் 21:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) 400 இலவச தலைக் கவசங்களும் சிறுவர்களுக்கு 150 தலைக் கவசங்களும் வழங்கப்பட்டன. ‘2017 பாதுகாப்புடன் பெருநாளுக்கு கிராமத்திற்கு செல்வோம்’ பிரச்சாரத்தை முன்னிட்டு இலவச தலைக் கவசங்கள் கொடுக்கப் பட்டுள்ளது என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் தொழில்முறை மற்றும் மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் கூறினார்.

2010-இல் இருந்து எம்பிஎஸ்ஏவின் சமுதாய சேவையாக தொடர்ந்து செய்து வருவதாகவும், பொது மக்களுக்கு தலைக் கவசம் அணிந்து பாதுகாப்பாக சாலை போக்குவரத்து விதிகளை பின்பற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

மேலும் கூறுகையில், மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பின்னிருக்கை பயணியும் சரியான, பாதுகாப்பான மற்றும்  தலைக் கவசங்களை அணியும் முறை போன்ற அம்சங்கள் இந்த பிரச்சாரத்தில் வலியுறுத்தப் பட்டது.

ஜாலான் கெபுன் கிராமத்தில், பாடாங் ராயாட், செக்சன் 30-இல் இந்த பிரச்சாரம் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் மேயர் டத்தோ அமாட் ஷாரின் முகமட் சாட் அவர்களால் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இலவச தலைக் கவசங்களை சீரிம் காஸ் இண்டர்நேசனல் நிறுவனம் மற்றும் எம்பிஎஸ்ஏவும் இணைந்து வழங்கியுள்ளது. மேலும் இந்த தலைக் கவசங்கள் அனைத்தும் சீரிம் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :