SELANGOR

எம்பிஐ நோன்பு பெருநாள் சிறப்பு உதவி நிதியான ரிம 4.3 மில்லியனை பகிர்ந்தளித்தது

ஷா ஆலம், ஜூன் 21:

மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) தனது அதிகாரத்தில் கீழ் செயல்படும் எட்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ரிம 4.3 மில்லியன் நோன்பு பெருநாள் சிறப்பு உதவி நிதி பகிர்ந்து அளித்தது. எம்பிஐயின் தலைமை செயல் அதிகாரி, ராஜா ஷாரின் ராஜா ஓத்மான் கூறுகையில் சிறப்பு உதவி நிதி ஒரு மாத போனஸாக பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்று விவரித்தார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த சிறப்பு உதவி நிதி மாநில அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு இரண்டு மாத போனஸ் வழங்கப்பட்டிருப்பதை பின்பற்றி செயல்படுத்தியதாக கூறினார்.

IMG_8237

 

 

 

 

 

குவே உணவகத்தில் நடந்த உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் தலைமை நடவடிக்கை அதிகாரி சொஃபுவான் அஃப்பென்டியும் கலந்து கொண்டார்.

உதவி நிதி வழங்கப்பட்ட அரசு சார்புடைய நிறுவனங்கள் 

1. சிலாங்கூர் பாரம்பரிய குழந்தைகள் வாரியம்

2. ஹிஜ்ரா சிலாங்கூர்

3. மீடியா சிலாங்கூர் அல்லது சிசிஎஸ்பி

4. சிலாங்கூர் பல்கலைக் கழகம்  (யுனிசெல்)

5. இன்வெஸ்ட் சிலாங்கூர்

6. டாருல் ஏசான் கல்லூரி

7. சிலாங்கூர் சுற்றுலா நிறுவனம்

8. புத்ரி அராஃபியா இல்லம்

#கேஜிஎஸ்


Pengarang :