SUKANKINI

கால்பந்து: உலக தரவரிசையில் மலேசியா, 155-வது இடம்

கோலாலம்பூர், ஜூன் 4:

அனைத்துலக கால்பந்து கூட்டமைப்பு சங்கத்தின்  (ஃபிஃபா) உலக தரவரிசை பட்டியலில் மலேசியா 155-வது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது மலேசியா பாபுவா நியூ கினி (153), சாட் (154), மாலத்தீவு  (156) மற்றும் சிங்கப்பூர்  (157)  போன்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் உள்ளது.

ஃபீஃபாவின் இணைய தளமான www.fifa.com, ஹாரிமாவ் மலாயா எனப்படும் மலேசிய கால்பந்து அணி கடந்த இரண்டு மாதங்களாக எந்த விளையாட்டு போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை என்றாலும் 148 புள்ளிகளுடன் 155-வது இடத்தில் உள்ளது என்று காட்டுகிறது.

மலேசியா கால்பந்து அணி போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த புதிய பயிற்சியாளராக நேலோ விங்காடா நியமிக்கப்பட்டதால் தனது ஆட்டத்தை மேம்படுத்தி ஜூன் 13-இல் லெபனான் உடனான 2019 ஆசியக் கிண்ண தகுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தரவரிசை பட்டியலில் முன்னேற முடியும்.

இதனிடையே, உலக தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. போலந்து நாடு மட்டும் ஒரு படி முன்னேறி 10-வது இடத்திற்கு வந்தது. மற்றபடி பிரேசில் முதல் இடத்திலும், முறையே அர்ஜென்டினா, ஜெர்மனி மற்றும் சிலி நாடுகள் அடுத்தடுத்து நிலையில் உள்ளனர் என்று இணையத்தில் தெரிவித்துள்ளது. உலக தரவரிசை பட்டியலில் மொத்தம் 206 நாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :