NATIONAL

சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்கள் ஈ-காட் பதிவு செய்யவில்லை எனில், பிரம்படி தண்டனை கிடைக்கும்

பந்திங், ஜூன் 14:

சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தி இருக்கும் முதலாளிகள் ஜூன் 30-குள் ஈ-காட் (அமலாக்க அட்டை) திட்டத்தில் பதிவு செய்யவில்லை எனில் பிரம்படி தண்டனையை எதிர் நோக்க நேரிடும் என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஸ்தாபார் அலி கூறினார். மேற்கண்ட முதலாளிகள் ஐந்துக்கும் மேற்பட்ட அந்நிய நாட்டு தொழிலாளர்களை பணியில் அமர்த்தியிருந்தால் ஒவ்வொருவருக்கும் தலா ரிம 10,000 அல்லது பிரம்படி தண்டனையும் எதிர் நோக்க நேரிடும் என்று தெரிவித்தார்.

கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் பல முதலாளிகள் இதை பயன்படுத்த தவறிவிட்டதால் இந்த அமலாக்க நடவடிக்கைகள் எடுக்க படுவதாக கூறினார்.

”   ஜூலை 1-இல் இருந்து அமலாக்க நடவடிக்கைகள் துரிதமாக நடைபெறும். ஈ-காட் திட்டத்தில் முதலாளிமார்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். கடைசி நேரம் வரை காத்திருக்காமல் இப்போது நடவடிக்கையில் இறங்குமாறு எச்சரிக்கை விடுக்கிறேன். ஏனெனில் கடைசி நேரத்தில் கூட்டம் குடிநுழைவு அலுவலகத்தில் நிரம்பி வழியும் போது எங்களுக்கு பெரும் சிக்கல்களை எதிர் நோக்க நேரிடுகிறது,”  என்று பெர்னாமாவிடம் கூறினார்.

முஸ்தாபார் மேலும் கூறுகையில், இந்த திட்டம் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை குடிநுழைவுதுறை சில நாட்களில் 2000 அந்நிய நாட்டு தொழிலாளர்களை பதிவு செய்ததாக கூறினார். இந்த எண்ணிக்கை கடைசி நேரத்தில் இன்னும் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.

PATI

 

 

 

 

”  கடந்த ஜூன் 7 வரை, 104,507 ஈ-காட் திட்டத்தின் வழி சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்கள் பதிந்து விட்டதாகவும், குடிநுழைவு துறை 400,000 இருந்து 600,000 சட்ட விரோத அந்நிய நாட்டு தொழிலாளர்களில் 10% மட்டுமே இது வரை பதிந்து இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

இதனிடையே, முஸ்தாபார் மேலும் கூறுகையில் நாட்டின் 137 நுழைவாயிலில் கடுமையான பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தும் என்று கூறினார். நோன்பு பெருநாள் காலத்தில் தரை, ஆகாயம் மற்றும் கடல் வழி நுழைவாயில்களில் இந்நடவடிக்கை செயல் படுத்தப்படும் என்றார்.

#கேஜிஎஸ்


Pengarang :