MEDIA STATEMENTUncategorized @ta

சீபில்ட் ஆலயம்: மாநில மந்திரி பெசாரின் ஊடகச் செய்தி

செய்தியாளர் சந்திப்புக் கூட்டம்

சிலாங்கூர் மந்திரி பிசார் அலுவலகம்

ஜூன் 6 2017

சீபீல்ட் USJ 25, பூச்சோங் அமைந்துள்ள தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் நிலத்தின் நிலவரம்

கடந்த சில நாட்களாக, USJ 25, பூச்சோங்கில் அமைந்துள்ள சீபீல்ட் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படும் என்ற அச்சம் பரவலாக நிலவி இருந்தது.

இந்த ஆலய உடைப்பு நடவடிக்கை மேம்பாட்டாளர் நிறுவனமான வான் சிட்டி என்ற நிறுவனம் நீதிமன்ற ஆணையின் மூலம் ஆலயம் அமைந்துள்ள நிலத்தை தன்வசம் ஆக்கிக்கொண்டது. இந்த நீதிமன்ற தீர்ப்பில் பலர் அதிர்ப்தினால் இன்னமும் சர்ச்சைக்குள் இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது.

இதன் சம்பந்தமாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்லஸ் சந்தியாகோ, பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கோபின் சிங் மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சிவராசா ஆகியோருடன் கலந்து இந்த பிரச்சனைப் பற்றிப் பேசி இருக்கிறேன்.

இந்திய சமுதாயம் முக்கியமாக இந்துக்கள் இந்த ஆலயத்தின் மீது கொண்ட அக்கறை மற்றும் சரித்திரம் புகழ் வாய்ந்த ஒரு ஆலயமாக இருந்து வருவதால், நான் இதனை மேம்பாட்டாளரிடம் பேசி ஆலயம் உடைக்கப்படும் நடவடிக்கையை தற்போது நிறுத்திக் வைத்திருக்கிறேன்.

இதில் முக்கியமாக,அனைவருக்கும் நல்ல பலனை தரும் ஒரு முடிவு எடுக்க இருப்பதால்,
சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரைகளையும் நான் சந்திக்க ஏற்பாடு வேலைகள் இன்னும் இரண்டு வாரங்களில் எடுக்கப்படும் என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன்.

டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி
சிலாங்கூர் மந்திரி பிசார்


Pengarang :