SELANGOR

சுற்றுச்சூழலை பாதுக்காக்க மக்களுக்கு விழிப்புணர்வு

ஷா ஆலாம் – நெகிழி மற்றும் போலிஸ்ட்ரின் பயன்பாட்டை குறைப்பது குறித்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் விவேகமான செயல்பாட்டினை சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி மன்றங்களும் அதன் ஆக்கப்பூர்வ பணியினை மேற்கொண்டு வருதாக அம்பாங் ஜெயா நகராண்மைக்கழகத் தலைவர் அப்துல் ஹமிட் உசேன் தெரிவித்தார்.

நெகிழி மற்றும் போலிஸ்ட்ரின் பயன்பாட்டை குறைப்பது ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கு வழிகோலும் என்பதையும் சிலாங்கூர் வாழ் மக்கள் அனைவரும் உணர்ந்து மாநில அரசின் விவேகமான சிந்தனை அதன் இலக்கை அடைய பங்களிக்க வேண்டும் என்றார்.

மக்களின் பெரும் ஆதரவை பார்க்கையில் எம்பிஏஜே நெகிழி மற்றும் போலிஸ்ட்ரின் இல்லா ஊராட்சி மன்றமாய் உருமாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாய் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த இலக்கு வெற்றி அடைய வேண்டி லைசன்ஸ்க்கு  விண்ணப்பம் செய்பவர்களு நெகிழியை பயன்படுத்தக்கூடாது மற்றும் இலவசமாய் நெகிழி வழங்கக்கூடாது எனும் விதிமுறையையும் ஊராட்சி மன்றங்கள் கடைபிடிப்பதாகவும் கூறிய அவர் போலிஸ்ட்ரின் பயன்பாடு இருக்கவே கூடாது என்பது விதிமுறையாக இருப்பதாகவும்  சுட்டிக்காண்பித்தார்.

IMG_9722      இந்நிலையில் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுக்காக்கவும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் இவ்வாண்டு ரமாடான் சந்தைகளில் முதன்மை இலக்காக கொண்டு ஊராச்சி மன்றங்கள் அதன் நடவடிக்கையினை மேற்கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில் எம்பிஏஜே பசுமையான ஊராட்சி மன்றமாய் உயிர்ப்பிக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் செயல் திட்டங்களும் தொடர்ந்து இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.இதன் மூலம் மாநில அரசின் இலக்கு வெற்றியடைவதையும் உறுதி செய்ய முடியும் என்றார்.

IMG_9733

இதற்கிடையில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்யை மறுசுழற்சி செய்து  அதன் மூலம் பையோடிசம் எடுப்பதற்கான நடவடிக்கையினை எம்பிஏஜே மேற்கொண்டிருக்கும் நிலையில் உணவு விரையத்திற்கு எதிராகவும் நவடிக்கையை மேற்கொள்ளும் விதமாய்  “மார்டிக்”க்குடன் “மை சேவ் பூஃட் மலேசியா”” எனும் திட்டத்திலும் கைகோர்த்துள்ளது என்றும் தெரிவித்தார்.


Pengarang :