SELANGOR

செயல்பாடுகலும் முன்நகர்வுகளும் சரியான இலக்கில் இருத்தல் வேண்டும்

ஷா ஆலாம் – சிறந்த செயல்பாடு மற்றும் ஆற்றல் மிக்க முன் நகர்வுகளோடு ஒவ்வொரு செலவினமும் விவேகமானதாய் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு இலாகாக்கள் அவர்களின் ஒவ்வொரு நகர்வுகளையும் மறுபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும் என மாநில தலைமைய செயலாளர் டத்தோ முகமட்  அமின் அமாட் ஹாய்யா அறிவுத்தினார்.

நடப்பியல் சூழலின் சிறந்த தர நிலையிலான முன் நகர்வுகள் வரும் இரண்டாம் காலாண்டிலும் சரியான இலக்கை நோக்கி பயணிக்க அஃது மிகவும் முக்கியமாய் விளங்குவதாகவும் அவர் நினைவுறுத்தினார்.

மாநில அரசின் 40 விழுகாடு செயல்திட்ட செலவினங்கள் அதன் இலக்கை எட்டியிருக்கும் நிலையில் வரும் இரண்டாம் காலாண்டில் ஒவ்வொரு அரசு இலாகாவும் தொடர்ந்து சரியான இலக்கில் அதன் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே நமது தனித்துவ இலக்காய் இருத்தல் வேண்டும் என்றார்.

நமது இலக்கு அதன் நிலையை எட்டுவதற்காக நாம் சரியான திட்டமிடலோடு அதன் அடைவுநிலையை எட்டிட விவேகமாய் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் அனைத்து தரப்பின் ஒத்துழைப்பு மற்றும் திறன் மிக்க செயல்பாடுகள் மாநில அரசின் இலக்கு வெற்றியடைய பெரிதும் பங்காற்றுவதாகவும் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தின் மேம்பாடு மற்றும் துரித வளர்ச்சிக்காக சிலாங்கூர் மாநில அரசாங்கம் சுமார் வெ.1.8 பில்லியனை ஒதுக்கியிருந்த வேளையில் அதில் 95 விழுகாடு சரியான இலக்கில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காண்பித்தார்.

IMG_7192

 

 

மாநில அரசாங்கம் மாநிலத்தின் ஐந்து இலாகாவிற்கு அதிகமான நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருப்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் அவை திட்டமிட்டப்படி மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு செயல்பாடுகளையும் அதன் கால வரையறைக்குள் செய்து முடித்து விடவும் வேண்டும் என கேட்டுக் கொண்டார். அதேவேளையில்,அதன் குத்தகையாளர்களின் செயல்பாடுகளையும் நன்முறையில் கண்டறிய வேண்டும் என்றார்.

பொதுப்பணித்துறை,மாநில செயலகம்,நீர் வடிகால் பாசனம்,இஸ்லாமிய இலாகா ஆகியவை அதன் செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் துரித நேரத்தில்மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் துள்ளியமாய் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில்,குத்தகை நிறுவனத்தை தேர்வு செய்வதிலும் விவேகம் மிகவும்  அவசியம் என்றார்.அந்நிறுவனங்களின் வேலைத்தரம்,நேர்மை,நேர்த்தி உட்பட அதன் முந்தைய செயல்பாடுகள் ஆகியவை கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என நினைவுறுத்திய அவர் வழங்கப்படும் குத்தகைக்கு ஏற்ற வேலை செயல்பாடுகளை கொண்டிருப்பதும் மிகவும் அவசியம் என்றார்.

ஒவ்வொரு அரசு இலாகாவும் சிறந்த முறையில் திட்டமிட்டு அதன் ஒவ்வொரு நகர்வுகளையும் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.அதன் மூலம் சிலாங்கூர் மாநிலம் சிறந்த மாநிலமாகவும் விவேகமான ஆற்றல் மிகுந்த மாநிலமாகவும் விளங்குவதை ஒவ்வொரு அரசு இலாகாவும் உறுதி செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 


Pengarang :