RENCANA PILIHANSELANGOR

ஜெஎம்பி மற்றும் குடியிருப்பாளர்கள் மோசடிகளை தவிர்க்க கவனமாக இருக்க வேண்டும்

பண்டான் இண்டா, ஜூன் 16:

ஒருங்கிணைந்த அடுக்குகம் நிர்வாக வாரியம் (ஜெஎம்பி) மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களின் கணக்கு வழக்குகளை சரியான முறையில் திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயம் மோசடிகள் நடக்காமல் தவிர்க்க முடியும் என்று சிலாங்கூர் மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் கூறினார்.

அனைத்து தரப்பினரின்   அக்கறையின்மையால், சில பொறுப்பற்ற தனிப்பட்ட நபர்களின் நடவடிக்கை ஜெஎம்பியை நஷ்டத்தில் இட்டுச் செல்லும் என்றார்.

”   ஜெஎம்பி முறையான குடியிருப்பு நிர்வாகம் நடைபெற சம்பந்தப்பட்ட தரப்பினர் அதிக கவனம் செலுத்த வேண்டும். சமூக நிர்வாக வாரியம் (ஜெஎம்சி) மற்றும் குடியிருப்பாளர்கள் தங்களின் கணக்கு வழக்குகளை சரியான முறையில் இருக்க அக்கறையோடு செயல் பட வேண்டும். மோசடிகள் நடந்த பிறகு நடவடிக்கைகள் வேண்டாம். கணக்கு வழக்குகள், வங்கி கணக்கில் உள்ள ரொக்கம் மற்றும் கடித தொடர்புகள் அனைத்தும் கவனிக்க பட வேண்டும். அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் (எம்பிஏஜே) கட்டிட ஆணையம் (சிஓபி) கண்டிப்பாக ஜெஎம்பி நிர்வாகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டால் உதவி கரம் நீட்ட தயாராக இருக்கிறது,” என்று கூறினார்

WhatsApp Image 2017-06-16 at 12.23.33

 

 

 

 

 

 

 

 

மாநில அரசாங்கம் ஜெஎம்பிக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் திறன் குறைந்த நிர்வாகங்கள் ஃபோகஸ் திட்டத்தின் மூலம் நிர்வாகத் திறனை வளர்த்துக் கொள்ளலாம் என்றார்.

இஸ்கண்டர், தாமான் லெம்பா மாஜூ குடியிருப்பாளர்கள் மற்றும் ஜெஎம்பி நிர்வாகம் ரிம 890,000 மோசடி செய்த நிர்வாகி மீது காவல்துறை புகார் செய்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.


Pengarang :