RENCANA PILIHANSELANGOR

‘டெர்மாசிஸ்வா’ திட்டம்: 1000 மாணவர்களுக்கு உதவி நிதி இலக்கு

ஷா ஆலம், ஜூன் 27:

சிலாங்கூர் பல்கலைக் கழகம் (யுனிசெல்) 1000 மாணவர்களை ‘டெர்மாசிஸ்மா’ திட்டத்தில் இணைக்க இலக்கு கொண்டுள்ளது என்று யுனிசெல் துணை வேந்தர், பேராசிரியர் டாக்டர் முகமட் ரிஸ்வான் ஓத்மான் கூறினார். யுனிசெல், தொழில் நுட்ப தகவல் மற்றும் அறிவியல் துறையில் மாணவர்களுக்கு இலவச அடிப்படை கல்வி (பௌண்டேஸன்) வழங்கப்படும் என்று விவரித்தார்.

”   முதலாம் ஆண்டு பரிசோதனை முறையில் 218 மாணவர்களை இந்த துறையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1000 மாணவர்களை இணைக்க இலக்கு கொண்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

Prof Redzuan (2)

 

 

 

 

 

”   அடிப்படை கல்வி, இலவசமாக வழங்கப்படுவது யுனிசெல்லை பொதுப் பல்கலைக் கழகங்களில் சமூக நல பொறுப்புள்ள பல்கலைக் கழகமாக பெயர் பெற்ற வேளையில் எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்கு உயர் கல்வி கற்க வாய்ப்பு வழங்குகிறது,” என்று தெளிவு படுத்தினார்.

#கேஜிஎஸ்


Pengarang :