ANTARABANGSA

துருக்கி: சவுதி அரேபியா காட்டார் விவகாரத்தை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்

துருக்கி, ஜூன் 14:

துருக்கி அதிபர் ரிகேப் தாயிப் எர்டோகன், காட்டார் மற்றும் அரபு நாடுகளுடன் ஏற்பட்ட தூதரக நெருக்கடியில்  சவுதி அரேபியா மன்னர் சால்மான் பின் அப்துல் அஸிஸ் அல் சவுட் தீர்த்து வைக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

துருக்கிய செய்தி நிறுவனமான, அனாடோலு வெளியிட்ட அறிக்கையில் சில அரபு நாடுகள் மேற்கொண்ட தூதரக உறவு துண்டிப்பு மனிதாபிமானமற்ற செயல் மற்றும் இஸ்லாமிய வழிமுறை இல்லை என்று நீதி & மேம்பாட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாற்றிய போது அவர் கூறினார்.

”   டாயீஸ் தீவிரவாதிகளை ஒழிக்க காட்டார் துருக்கியுடன் இணைந்து போராடி வருகின்றனர்,” என்று எர்டோகன் கூறினார்.

மேலும் கூறுகையில் அவர் காட்டார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தூக்குத் தண்டனை போலாகிவிடும் என்றும் சவுதி அரேபியா அந்த நாட்டின் மீது எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனிடையே துருக்கிய ராணுவ குழு காட்டார் நாட்டிற்கு அனுப்பியதாகவும், மேலும் கட்டம் கட்டமாக ராணுவ வீரர்கள் அனுப்பப் படுவார்கள் என்று எர்டோகன் கூறினார். இதற்கு முன்பு, துருக்கிய நாடாளுமன்றம் காட்டாருக்கு ராணுவ வீரர்களை அனுப்பும் தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 2015-இல் டோஹாவில் இரண்டு நாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று துருக்கிய செய்தி நிறுவனமான, அனாடோலு வெளியிட்ட அறிக்கையில் விவரித்தது.

#கேஜிஎஸ்

PERANG DIPLOMATIK: Negara Arab vs Qatar, Apa yang berlaku?

=EZY=


Pengarang :