RENCANA PILIHANSELANGOR

தொகுதி மறுசீரமைப்பு செய்யும் எஸ்பிஆர்-க்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசின் வழக்கு ஜூலை 20-க்கு ஒத்திவைப்பு

ஷா ஆலம், ஜூன் 20:

தேர்தல் தொகுதி எல்லைகளை மறுசீரமைப்பு செய்யும் மலேசிய தேர்தல் ஆணையம் (எஸ்பிஆர்) மீது சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடர்ந்து வழக்கை புத்ராஜெயா மேல் முறையீடு நீதிமன்றம் ஜூலை 20-க்கு ஒத்திவைத்தது என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி தனது அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

அம்பிகா சீனிவாசனுக்கு பதிலாக சிலாங்கூர் மற்றும் மலாக்கா மாநிலங்களுக்கு வாதாடிய தோம்மி தோமஸ் கூறுகையில் மேல் முறையீடு நீதி மன்றத்தில் நீதிபதிகளாக டத்தோ உமி கால்தூம் அப்துல் மாஜிட், டான்ஸ்ரீ இட்ரூஸ் ஹாருன் மற்றும் டத்தோ ஹாஸ்னா முகமட் ஹாசிம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்று கூறியதாக மலேசியா கினி செய்தி வெளியிட்டுள்ளது.

தோமஸ் மேலும் கூறுகையில், ஜூன் 9-இல் நடைபெற்ற வழக்கு நிர்வாகத்தில், அம்பிகா பதிவதிகாரிக்கு ஜூன் 20-இல் தமக்கு மற்றுமொரு வழக்கு செவிமடுக்க உள்ளது என்று தெரிவித்தும் வழக்கை அதே தேதியில் தொடர வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில அரசாங்கம், எஸ்பிஆர் கொண்டு வந்த புதிய தொகுதி மறுசீரமைப்பு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக இருக்கிறது என்பதைசுட்டிக் காட்டியது. 13வது பட்டியல், அரசியலமைப்பு சட்டத்தில் விதி 2 (c) & 2 (d) மற்றும் விதி 113 (2) போன்றவை அடிப்படையில் இந்த தொகுதி மறுசீரமைப்பு செல்லாது மற்றும் நீக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது.

சிலாங்கூர்  மாநில அரசாங்கம் எஸ்பிஆர் வெளியிட்ட புதிய வாக்காளர் பட்டியல் பயன்படுத்தாமல் மறுசீரமைப்பு செய்த முறையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாகவும், செக்சன் 13, 13வது அரசியலமைப்பு சட்ட பட்டியல் படி செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :