RENCANA PILIHANSELANGOR

தொகுதி மறுசீரமைப்பு: வழக்கை முன்கூட்டி வைப்பதை கண்டு மந்திரி பெசார் ஆச்சரியம்

ஷா ஆலம், ஜூன் 12:

மலேசிய தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடுத்த சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் வழக்கை ஒரு மாதத்திற்கு முன்பு நடத்த வேண்டும் என்ற செய்தியை கண்டு தாம் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அடைவதாக சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கூறினார். தொடர்ந்து பரிந்துரைக்கப்பட்ட புதிய திகதி ஏற்புடையது அல்ல என்றும் மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்த வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக கூறினார்.

ஆனாலும், அஸ்மின் அலி கூறுகையில், தனது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாட்டின் தலைமை நீதிபதி கட்டளையின் பேரில் இது நடப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

”   ஜூன் 9-க்கு மாற்றும் நடவடிக்கை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். வழக்கை தாக்கல் செய்த முறையில் மாநில அரசாங்கத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு பொது மக்களின் நலன் சம்பந்தப்பட்டதாகவும் அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் வாக்களிக்கும் உரிமையை உள்ளடக்கியதாக இருக்கிறது,” என்று அஸ்மின் அலி கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், அஸ்மின் அலி நீதிமன்றம் ஜூலை 6-இல் இருந்து ஜூன் 9-க்கு எந்த காரணமும் இன்றி முன்கூட்டி கொண்டு வந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Azmin MB

 

 

 

 

 

 

”  நீதிமன்ற பதிவதிகாரி வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கட்டளையின் பேரில் ஜூன் 20-இல் நிர்ணயம் செய்யப்படள்ளதாக எங்களிடம் தெரிவித்தார்,” என்று அஸ்மின் அலி கூறினார்.

கடந்த அக்டோபர் 19 2016-இல், மாநில அரசாங்கம் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மூலமாக மலேசிய தேர்தல் ஆணையத்தின், சிலாங்கூர் மாநில நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதிகளின் மறுசீரமைப்பு பரிந்துரை மீது கேள்வி எழுப்பும் அனுமதி கேட்டு வழக்கு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

#கேஜிஎஸ்


Pengarang :