NATIONALRENCANA PILIHAN

நஜிப் ரசாக்கின் அரசாங்கம், தொடர்ந்து மக்களை நசுக்குகிறது

வாழ்க்கை செலவீனங்கள் மற்றும் கடன் சுமைகளால் நகரவாசிகள் குறிப்பாக ஏழ்மை நிலையில் வாழும் குடும்பங்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதாக பத்து தீகா சட்ட மன்ற உறுப்பினர் ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார். அவரின் கூற்று, நகர மேம்பாட்டு திட்டமிடல் நிபுணரான எங் முன் யென்னின் அறிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. எங் முன் யென்னின் அறிக்கையின் படி வாழ்க்கை செலவீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோலாலம்பூர் நகரவாசிகள் சிலாங்கூர் மாநிலத்திற்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.

அம்னோ தேசிய முன்னணி அரசாங்கம், நாட்டு மக்களுக்கு முறையான உதவி திட்டங்களை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை உணர முடிகிறது. இது பிரீம் எனப்படும் ஒரே மலேசியா உதவித்தொகை மூலம் மக்களின் சிரமங்களை தீர்க்க இயலாத ஒன்று என்று ரோஸ்ஸியா கூறினார். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி கீழ் மக்களின் சிரமங்களை குறைக்க மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை அமலாக்கம் செய்தது போல அம்னோ தேசிய முன்னணி அரசாங்கமும் இந்த நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.

ரோஸ்ஸியா மேலும் கூறுகையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி, சிலாங்கூர் மாநில அரசாங்கத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வருவது மட்டுமில்லாமல் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. சிக்கனமாக நிதி நிர்வாகம், வெளிப்படையான கொள்கைகள் மற்றும் “வேல்யு ஃபோர் மணி” கொள்கை மாநிலத்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறினார்.

”   நாட்டு மக்களுக்கு இப்போது முதல் பிரச்சனையாக இருப்பது பொருட்கள் மற்றும் சேவை வரியால் (ஜிஎஸ்டி) விலைகள் ஏற்றம் கண்டு வாழ்க்கை செலவீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஆகும். பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி இந்த பிரச்சனையை களைய தீர்வு வைத்திருக்கிறது.லஞ்ச ஊழல் முறைகேடுகளை தவிர்க்கவும், கடனுதவி வட்டி விகிதம் குறைப்பு மற்றும் லாப வரி விதிப்பு ஆகிய நடைமுறைகளை அமல்படுத்த பாக்காத்தான் முயற்சிகள் எடுக்கப்படும்,” என்று ரோஸ்ஸியா இஸ்மாயில் கூறினார்.

நேற்று, எங் முன் யென்னின் அறிக்கையின் படி கோலாலம்பூர் தலைநகரம் மக்கள் வாழ சிறந்த இடமில்லை என்றும் நகரவாசிகள் சிலாங்கூரை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

=EZY=


Pengarang :