SELANGOR

நாட்டு மக்களை இரண்டு வேலை செய்யும் பரிந்துரையை கைவிட்டு ஐபிஆர்-ஐ பின்பற்றுக

ஷா ஆலம், ஜூன் 24:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவுமிக்க மக்கள்நல செயல்பாடுகளை (ஐபிஆர்) பின்பற்றி மத்திய அரசாங்கம் மக்களின் சுமைகளை குறைக்க வேண்டும். இதை விடுத்து, நாட்டு மக்களை இரண்டு வேலை செய்யும் அமைச்சர்களின் பரிந்துரையை விட்டுவிட்டு சிலாங்கூர் மாநிலத்தின் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில வீடமைப்பு, கட்டிட நிர்வாகம் மற்றும் நகர நல்வாழ்வு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஸ்கண்டர் அப்துல் சமத் கூறினார்.

இதற்கு முன்பு அனைத்துலக வாணிப மற்றும் தொழிற்துறை துணை அமைச்சர் டத்தோ அமாட் மஸ்லான் டிவிட்டர் மூலம் பரிந்துரை செய்த இரண்டு வேலை செய்யும் முறை குடும்பங்களின் நல்லுறவை பாதிக்கும் என்று இஸ்கண்டர் தெரிவித்தார்.

”    குடும்பத்தில் தந்தையோ அல்லது தாயோ இரண்டு வேலை செய்யும் நடவடிக்கை பிள்ளையிடம் நேரத்தை செலவு செய்ய விடாமல் போய் விடும். இதுவே குடும்பங்களின் பிரச்சனைகளைக் கொண்டு வரும். இதன் தாக்கம் பிள்ளைகள் பெற்றோர்களின் அன்பை வெளிப்படுத்த வழி இல்லாமல் போகும். பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாமல் பிள்ளைகள் தவறான நண்பர்களுடன் சேர்ந்து தீய வழியில் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும்,” என்று விவரித்தார்.

iskandar01

 

 

 

 

 

 

 

இதனிடையே மத்திய அரசாங்கத்தின் பொருட்கள் மற்றும் சேவை வரி தாக்கத்தினால் வாழ்க்கை செலவீனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும் மலேசிய நாணயத்தின் மதிப்பில் வீழ்ச்சி அடைந்து வரும் வேளையில் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கி செல்வதாக கூறினார்.

ஆனாலும், சிலாங்கூர் மாநில பரிவு மிக்க அரசாங்கம் மாநில மக்களுக்கு மலிவு விலை வீடுகளுக்கான வரிவிலக்கு மற்றும் பெடுலி சேஹாட் இலவச  சுகாதார அட்டை திட்டம் போன்ற மக்கள் நல திட்டங்களை ஐபிஆர் மூலம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :