RENCANA PILIHANSELANGOR

நீண்ட விடுமுறைக்கு செல்வோர் வீட்டின் தூய்மையை உறுதி செய்யவும் – டிங்கிக்கு எதிராய் களமிறங்குவோம்

ஷா ஆலாம் – நோன்பு பெருநாளை முன்னிட்டு சொந்த கிராமங்களுக்கு புறப்படும் ஷா ஆலாம் வாசிகள் புறப்படுவதற்கு முன்னர் தத்தம் வீடுகள் சுத்தமாகவு இருப்பதை உறுதி செய்வதோடு ஏடிஸ் கொசுக்களின் உற்பத்திக்கு காரணமான எந்தவொரு வாய்ப்பு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு ஷா ஆலாம் கார்ப்ரெட் மற்றும் பொது தொடர்பு  பிரிவு தலைமை அதிகாரி ஷாரின் அமாட் கேட்டுக் கொண்டார்.

இதற்கு முன்னர் இது போன்ற நீண்ட விடுமுறைக்கு பின்னர் டிங்கியின் எண்ணிக்கை அதிகரித்திருந்ததை நினைவுக்கூர்ந்த அவர் விடுமுறைக்கு செல்வதற்கு முன்னர் முன்னெச்சரிக்கையான நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டியது அவசிய என்றும் அவர் நினைவுறுத்தினார்.

குறிப்பாக,நீர் தேங்கக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அதனை சுத்தம் செய்வதோடு வீட்டில் குளியல் தொட்டி,பூச்செடிகள் தொட்டி உட்பட பல்வேறு இடங்களை சுத்தம் செய்வதில் கவனம் தேவை என்றும் அவை முறையாக சுத்தம் செய்யப்பட்டிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

 

SHAHRINஎம்பிஎஸ்ஜே வீட்டில் நீர் தேங்கக்கூடிய அனைத்து வகை பொருட்களையும் அப்புறப்படுத்த அறிவுத்தும் அதேவேளையில் ஏடிஸ் கொசுக்களின் உற்பத்தியை அழிக்க அதற்கான மருந்துகளையும் பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்வதாக கூறிய அவர் காலி டின்கள்,சாக்கடைகள்,போட்டல்,டயர் போன்றவைகள் வீட்டின் அருகில் இருந்தால் அதனையும் அப்புறப்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

பொது மக்கள் உட்பட அனைத்து தரபும் வழங்கிடும் ஒத்துழைப்பும் ஆதரவும் மட்டுமின்றி ஆக்கப்பூர்வ பங்களிப்பும் டிங்கிக்கு எதிராய் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு நடவடிக்கையும் வெற்றி அடையும் என்றும் தெரிவித்தார்.டிங்கிக்கு எதிராய் நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு களமிறங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

நாம் அனைவரும் ஒன்றுப்பட்டு களமிறங்கினால் ஷா ஆலாம் வட்டாரத்தில் டிங்கிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் எனவும் நினைவுறுத்திய அவர் தொடர் காய்ச்சல் உட்பட டிங்கி காய்ச்சலுக்கான அறிக்குறி தென்பட்டால் உடனடியான மருத்துவமனைக்கு செல்லுமாறும் பொது மக்களுக்கு அவர் ஆலோசனையும் கூறினார்.

 

 


Pengarang :