NATIONAL

நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சற்று மெதுவாக நகர்கிறது

கோலா லம்பூர், ஜூன் 24:

நோன்பு பெருநாளை ஒட்டி தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களுக்கு, சில முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சற்று மெதுவாக நகர்கிறது என்று வடக்கு தெற்கு நெடுஞ்சாலை திட்ட போக்குவரத்து கட்டுப்பாடு மையத்தின் பேச்சாளர் கூறினார்.

தீபகற்ப மலேசியாவின் வடக்கு நோக்கி செல்லும் மக்கள், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சுங்கை புவாயாவில் இருந்து புக்கிட் பெருந்தோங், புக்கிட் பெருந்தோங்கில் இருந்து புக்கிட் தாகார், புக்கிட் தாகாரில் இருந்து லெம்பா பெரிங்கீன் போன்ற பகுதிகளில் போக்குவரத்து மிகவும் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

”   இன்று காலை 9மணி நிலவரப்படி, லெம்பா பெரிங்கீனில் இருந்து தஞ்சோங் மாலிம் மற்றும் பேராங் வரையில் போக்குவரத்து மெதுவாக நகர்கிறது,” என்று பெர்னாமாவிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதே நிலைமை சிலிம் ரிவர்-சுங்காய், சுங்காய்-பீடோர், பீடோர்-தாப்பா, தாப்பா-குவா தெம்புரோங், கோப்பேங்-சிப்பாங் பூலாய், ஜெலாப்பாங்-தஞ்சோங் மெனாரா மற்றும் தஞ்சோங் மெனாரா-சுங்கை பேராக் போன்ற பகுதிகளில் போக்குவரத்து சற்று மெதுவாகவே நகர்கிறது என்றும் குறிப்பிட்டார்.

இதனிடையே பிளஸ் நெடுஞ்சாலையில் தெற்கு செல்லும் பொது மக்கள் நீலாய்-சிரம்பான் ஓய்வு எடுக்கும் மையம் வரை போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்றும் மற்ற இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்படாது தெரிவித்தார்.

இதையடுத்து, மலேசியா நெடுஞ்சாலை வாரியம் தனது அறிக்கையில், கிழக்குக்கரை நெடுஞ்சாலையில் கோம்பாக்கில் இருந்து பெந்தோங் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் சற்று கடுமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

பொது மக்கள் மேலும் விவரங்களுக்கு:

bebas tol Plusline 1800-88-0000 dan laman Twitter di www.twittercom/plustrafik atau talian LLM di 1800-887752 serta laman Twitter di www.twitter.com/LLMinfotrafik.


Pengarang :